ஆர்எஸ்எஸ் உருவாக்கும்  சமஸ்கிருத குருகுலங்களுக்கு மத்திய அரசு உதவும்: ஸ்மிருதி இரானி

நாடு முழுவதும் 300 இடங்களில் குருகுலங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்துக்கு மத்திய அரசு முழுஉதவி செய்யும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதி அளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநிலமொழிகள் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்தாலும், அதையும் மீறி மத்திய அரசும், குறிப்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையும் சமஸ்கிருதமயமாக்கலை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவது தொடங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். உருவாக்க உள்ள குருகுலங்களுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தின் புத்தூர் தாலுகாவில் உள்ள மைத்ரேயி குருகுலம்; சிருங்கேரி பிரபோதினி குருகுலம்; பெங்களூருவில் உள்ள வேதவிக்ஞான குருகுலம் ஆகியவற்றை ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. அண்மையில் பெங்களூரு வந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த குருகுலங்களைப் பார்வையிட்டுள்ளார்.

அப்போது குருகுல நிர்வாகி டாக்டர் ராமச்சந்திரா பகத்தை சந்தித்த ஸ்மிருதி இரானி, குருகுலங்கள் மூலமாக சமஸ்கிருத மொழியை வலுத்தப்படுத்த நாடு முழுவதும் நிறைய குருகுலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் 300 குருகுலங்களை உருவாக்குவதற்கு தாம் முழு ஆதரவு தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் ஓம் மந்திரம்

இதனிடையே, ஜூன் 21-ம்தேதி தேசிய யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அன்று பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் ‘ஓம்’ எனும் மந்திரத்தையும், சமஸ்கிருத ஸ்லோகங்களையும் சொல்ல வேண்டுமென்று பல்கலைக் கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை யுஜிசி நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தீக்கதிர் செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.