வழக்கமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் , “டாக்டர் ஆகணும்” “இன் ஜினியர் ஆகணும்”, “சார்டட் அக்கவுண்டட் ஆகணும்” “கலெக்டர் ஆகணும்” என்றுதான் சொல்லவார்கள். பிளஸ் டூ தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா. இவருடைய மதிப்பெண்கள் 1195. சென்னை குட்ஷெப்பர்டு பள்ளி மாணவி சத்ரியா பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கல்வியில் படித்துவிட்டு, பின்னர் பிரெஞ்சு மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்தவர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் ஆவதுதான் என்னுடைய லட்சியம்” என்று தெரிவித்தார்.