நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில அளவில் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் மிகக் குறைவாக(57%) பதிவாகியுள்ளது. ஏன் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் ஏன் குறைந்தது என முகநூல் முழுக்க விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் நடக்கும் இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே…
ஊடகவியலாளரும் பிரபல முகநூல் பதிவருமான Saraa Subramaniam காரணத்தை அலசுகிறார்:
“விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை வீடு மாறும் அவலநிலைக்கு ஆளாவதில் தமிழக அளவில் முதன்மை வகிப்பது சென்னை நடுத்தர மக்கள்தான். ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் உடனடியாக வாக்காளர் அட்டையின் முகவரியையும் எளிதில் மாற்றிக்கொள்வது உள்ளிட்ட நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை எளிதில் தீர்க்க வழிவகுக்காமல் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக கவனம் செலுத்திவிட்டு, வாக்குப்பதிவு குறைவை முன்வைத்து சென்னைவாசிகளை கழுவியூற்றுவது எந்த வகையில் சரி?”
பிரபல முகநூல் பதிவர் Abdul Vahab நீண்ட பதிவை எழுதியிருக்கிறார்…
“சென்னை காரங்க இப்ப மத்த ஊர்காரன திட்ட ஆரம்பிச்சிட்டாங்க என்னனு பார்த்தா மத்த ஊர்காரங்கள் வந்து தான் சென்னை தனித்தன்மை போயிட்டு சொல்றாங்க !! அவங்க தனித்தன்மை என்னன்னு பார்த்தால் 40 வருசத்துக்கு முன்னாடி டேய் கஸ்மாலம், பிஸ்னாரி , ங்கோம்மால, எங்கன ஈத்திகினி போற ….. போன்ற ஐநா சபை அங்கீகரித்த மொழிகளை பேசிட்டு இருந்தாங்க இப்பதான் எல்லா ஊர்க்காரன் வந்து இதை எல்லா மறக்க வச்ச மொழி போர் தியாகிகள் நாங்கள்.
அடுத்து பார்த்தால் தாமிரபரணி, காவேரி, சிறுவாணி போன்ற ஆறுகள் எல்லா இன்னும் அதோட மகத்துவத்தை இழக்காமல் இருக்கு. பெப்சி கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் வர விடாம ஜனங்கள் போராடிகிட்டுதா இருக்காங்க. கூவம் ஆறு சரி பண்றோம் எதாச்சும் நடவடிக்கை எடுத்து இருப்பாங்களா மூக்க பொத்திட்டு போயிட்டு வரின்களே இத தூர்வாறி கொடுங்கன்னு போராட்டம் பண்ணி இருப்பிங்களா.
உங்கள ஓட்டு சதவிதம் கம்மியா இருக்குன்னு குத்தம் சொல்லல சென்னை வெள்ளத்தால் நாசமா ஆகி இருக்கும் எல்லா மாவட்ட மக்கள் வரும் போது அரசு நிர்வாகம் முடங்கி போய் இருந்ததே அந்த கோபத்தை காட்டவாச்சும் நோட்டாக்கு ஓட்டு போட வந்து இருக்கலாம்.
எத்தனை ஐடி நிறுவனங்கள் இருக்கு தென் மாவட்டம் ல நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா ஆரம்பிக்கிறோம் சொல்லி இருபது வருஷம் ஆச்சு இன்று வர நடந்த பாடில்லை .18மணி நேரம் மின்வெட்டு ல செத்துட்டு கடக்கும் போது தலைமையிடமான சென்னைல மத்த மாவட்ட மக்கள் எல்லா கஸ்டபடுறாங்க, பரிதாப்பட்டு போரரட்டம் பண்ணிங்களா உங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னு 30 மாவட்டங்கள் வரும் போது 30 மாவட்டம் காரன் கஷ்டப்படும் போது ஒரு சென்னை காரன் போராட்டம் பண்ணி இருந்தா அது தேசம் முழுக்க எதிரொலோளித்து இருக்கும் .ஒரு இத்து போன கெழவன் அண்ணா ஹசாரேக்கு ஊழல் போராட்டத்துக்கு எதிரா மெழுகு வத்தி ஏந்தி மெரினா கடற்கரை ல கூடின நீங்க உங்களோட அடிப்படை தேவைக்கு என்னைக்கு கூடி இருப்பிங்க தலைமை செயலகம் முன்னாடி சொல்லுங்க . தாமிரபரணி, மீத்தேன், முல்லை பெரியாறு, எல்லா பிரச்சனைகளை அவங்க அவங்க அந்த அந்த மாவட்டம் =ல போராடுறாங்க .
நல்ல ரோடு இல்ல சுகாதாரம் இல்ல டிகிரி முடிச்சிட்டு என்ன பண்றது தெரியாம ஊர்ல பிழைக்க வழி இல்லமால் தான் சென்னை வரவன் பாதி….. எங்கயோ மூலைல கடக்கிற சென்னைல எல்லா செல்வங்களை கொட்டுறதுக்கு பதிலா தென்மாவட்டத்தில் கொட்டுங்க பெரிய நிறுவனங்கள் கொண்டு வந்து எங்களுக்கு கொடுங்க …சேதுசமுத்திர திட்டம் இன்னைக்கு நிறைவேறி இருந்தால் சர்வதேச நிறுவனங்கள் உள்ள வந்து தூத்துக்குடி ஏர்போர்ட் இன்னைக்கு தேசிய விமான நிலையம் ஆகி இருக்கும். மொக்க காரணங்களுக்கு திட்டங்களை முடக்குவது.
வருசத்துக்கு ஒரு தடவ குத்தாலத்துல குளிச்சிட்டு போற உங்களுக்கு தெரியாது தாழ்வுமனப்பான்மைல என்ன பண்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கிற தென்மாவட்ட இளைஞர்களை….வெளிநாட்டு வாசிகள் அதிகம் உள்ள கடையநல்லூர் மக்கள் கூட 70 சதவிதம் பதிவு பண்ணும் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீங்க உங்க ரோசத்தை எம்புட்டு காட்டி இருக்கணும். நேற்று பதிந்த பதிவுல நண்பர் இட்ட கமெண்ட் இது (சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சேர்ந்த குப்பை கழிவுகளை விசிக தலைவர் திருமாவளவன் அள்ளிக்கொண்டிருந்த போது, தூரத்தில் அமர்ந்திருந்த இருவரும் திருமாவளவனை பார்த்து அங்கேயே அள்ளிக்கொண்டிருந்தா எப்படி? எங்க வீடுகளையும் க்ளீன் பண்ணிக்கொடுங்க அப்படினாங்க. உடனே திருமா சொன்னார். அண்னே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க இதோ வந்துடுறேன்’ அப்படினார்). இதெல்லாம் எம்புட்டு பெரிய அசிங்கம்.
ஆந்திராவ பிரிச்சி கொடுத்ததுக்கு பதிலா சென்னை அவங்க கிட்ட கொடுத்துட்டு திருப்பதி நம்ம வச்சி கிட்டா வருமானம் வந்து இருக்கும். இந்த சென்னை நாள மத்த மாவட்ட காரனுக்கு எந்த பிரயோஜனம் இல்ல. தலைமையகத்தை கன்னியாகுமரில வைங்க எல்லாரும் வாழலாம் எங்க கிட்ட இயற்கையா மலைகள், அருவிகள், அணைகள், கடற்கரை துறைமுகம் எல்லாமே இருக்கு.
திருசெந்தூர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைல ஆஃபர்ல திருப்பூர் மாவட்ட துணிகள பர்சஸ் பண்ணிட்டு, தஞ்சாவூர், நெல்லை மாவட்ட அரிசியும் நாமக்கல் சிக்கன் 65 புகாரில சாப்பிட்டு, நெய்வேலி காரன் கொடுக்கிற கரெண்ட்ல வாழ்ந்துட்டு, காஞ்சிபுரம் பட்டு தலைல மதுரை மல்லிக பூ வச்சிட்டு திருநெல்வேலி அல்வா ஆன்லைன்ல பர்சஸ் பண்ணி சாப்பிட்டு உங்களுக்குன்னு எந்த பாரம்பரியம் இல்லாம இருக்கிற நீங்க சென்னை பெருமையா சொன்னா போடா வெண்ணைன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்.”
பிரபல முகநூல் பதிவர் Vikkranth Uyir Nanban பதிவு மேலே உள்ள பதிவுக்கு பதிலளிக்கிறது…
இங்க ப்ளாட்ஸ்ல வாழ்றது பூறா சென்னைக்காரங்கன்னு உங்கள யாருய்யா நம்ப வெச்சது??? குடிசை ஒட்டுகள் பூறா ஒழுங்கா விழுந்திருக்கு… அதுதான் சென்னை..
இங்கே கேஸ் கனெக்ஷன் வாங்குறதுக்காக வாக்காளரா பதிவு செஞ்சு…ரேஷன் கார்டு வாங்கி வெச்சிட்டு மூணு நாள் லீவு கிடைச்சதும் ஓடிப்போனது…உங்க ஊரை விட்டு வந்து இங்கு சுகபோகமா செட்டிலான உங்க சொந்தகாரைங்கதான்…
அவிங்கள அங்கனயே வெச்சிக்கோங்க.. இங்க நூறு சதவிகிதம் பதிவாகும்..
-நாம் சென்னை தலைமை கழகம்…”
பிரபல முகநூல் பதிவர் கோ புவின் பதிவு இது: