நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சென்னையில் 57 சதவீத வாக்குப் பதிவு மட்டுமே பதிவாகியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில்,
சென்னையில் வாக்கு செலுத்தாத மீதி 43 சதவிதம் பேருக்கு ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டியுள்ளார்.
இந்த ட்விட்டுக்கு கிட்டத்தட்ட 2000 ரீ- ட்விட்டுகளும், 2000க்கும் அதிகமான விருப்பங்களும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்துள்ளன. பலர் ஆதரித்தும் சிலர் மாற்றுக் கருத்தை வைத்தும் பின்னூட்டம் இட்டுள்ளனர்.
முகநூலிலும் பாலாஜியின் ட்விட் குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
சமூக அரசியல் விமர்சகர் வில்லவன் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில்…
“ஓட்டு போடாதவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என அறச்சீற்றம் காட்டியிருக்கிறார் ஒரு துணை நடிகர் (ஆர்.ஜே -பாலாஜி)
தண்ணீர், உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவை எல்லாம்கூட அடிப்படை உரிமைகள்தான். அது 100% எல்லாருக்கும் கிடைத்துவிட்டதா?
அந்த உரிமைகளுக்காக மக்கள் போராடியபோதெல்லாம் சார்வாள் எங்கே புடுங்க போயிருந்தீர்கள்?
அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா பட்டன அமுக்குறது மட்டும்தான் ஜனநாயக கடமைன்னு நெனக்கிறவன் பொணத்துக்குதான் சமானம்.
மொதல்ல உங்க போதை தெளியட்டும், அப்புறமா எங்களுக்கு தெவசம் பண்றதப்பத்தி யோசிங்க”.