பூத் சிலிப் கிடைக்காதவர்கள், பதினோரு வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டு
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு என்கிற நிரந்தர கணக்கு எண் அட்டை
- மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய பணி அடையாள அட்டை
- வங்கிகள், தபால் நிலையங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள்
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் தலைமைப் பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டு
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
- தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கிய அனுமதிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு
உள்ளிட்டவற்றை காண்பித்து வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர
- நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை காண்பித்தும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.