தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 77. 08 சதவீதம் வாக்குப்பதிவானது.
தற்போது 232 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 44ஆயிரத்து 129 ஆண்களும், 2 கோடியே 16 லட்சத்து 28ஆயிரத்து 807 பெண்களும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 738 பேர் வாக்களித்துள்ளனர். அதிகப்படியாக தருமபுரி மாவட்டத்தில் 85. 03 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 60. 99 சதவீத வாக்குகளும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.