சென்னையில் ஆர்கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். ஆர்.கே நகர் கூட்டணியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மை மாற்றப்பட்டு எளிதில் அழியும் போலியான மை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைமைத்தேர்தல் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றுள்ளதாகவும் ஆர்கே நகர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்த உள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.