ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்த நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தன்னுடைய பிரச்சாரத்தை ஸ்ரீபெரும்புதூரில் முடித்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மா. வீரக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அவர்.

மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் மா. வீரக்குமார் வாக்களர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

திருப்பெரும்புதூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்.

என் பெயர் மா.வீரக்குமார். நான் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் வேட்பாளராக நமது திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தலைவர் எழுச்சித்தமிழரின் தலைமையேற்று அவர் கொள்கைவழியில் தமிழ் தேசிய – தமிழீழக் களத்தில் இருக்கிறேன். நான் தாம்பரம் அடுத்துள்ள வரதராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு சுஜா எழிலரசி என்ற மனைவியும், எழில் வர்ணா (10), எழில் ஓவியா (8) மற்றும் எழில் சமரன் (4) என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். நான் வர்ணா நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், துவாரகா எக்சிம் என்னும் நிறுவனத்தில் பங்குதாரராகவும் உள்ளேன்.

நான் அடிப்படையில் எளிய விவசாயக் கூலி குடும்பத்தில் பிறந்தவன். இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் நேசம் கொண்டவன். ‘பசுமை கரங்கள்’ என்ற அமைப்பின் மூலம் என் நண்பர்களுடன் மரம் நடுதல், இயற்கைவள பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ‘சிவந்த கரங்கள்’ என்ற அமைப்பின் மூலம் குருதி கொடையாளர்கள் தகவல் மையத்தை நடத்தி வருகிறேன், ‘தமிழ் அறம்’ என்ற அறக்கட்டளையை நிறுவி தமிழகம் தழுவிய அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நல உதவிகளை செய்து வருகிறேன்.

என்னுடைய லாப நோக்கமற்ற சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாகத்தான் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உங்களுக்கு சேவை செய்ய உங்கள் தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். நான் வாழ்க்கையில் அடிமட்ட நிலையிலிருந்து வந்தவனென்பதால் எளிய மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் அறிந்தே வைத்துள்ளேன். எனக்கு மற்றவர்களைப் போல ஓட்டுகளை பெறுவதற்காக வழக்கமான பொய்யான வாக்குறுதிகளை தருவதில் உடன்பாடில்லை. என்னுடைய ஒரு மாதகால சுற்றுப்பயணத்தில் நம் தொகுதியிலுள்ள தேவைகளை அறியமுடிந்தது. இங்கு இதுகாறும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் வெளிநாட்டு கார்பரேட் கம்பெனிகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதம் கூட நம் குறைகளை தீர்ப்பதற்கு முன்வந்ததில்லை. பெரும்பாலான தொகுதி மக்களுக்கு சாலை, சுகாதாரம், குடிநீர் என அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. ‘சொல்லுக்கு முன் செயல்’ என்பதை உறுதியாக நம்புபவன் நான். என்னை நீங்கள் வெற்றியடையச் செய்யும்பட்சத்தில் உங்களின் தேவைகளை நிறைவேற்றும் எளிய தொண்டனாக பணி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.

ஆண்ட, ஆளும் கட்சிகள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிகளை கொட்டி, மக்களை முட்டாள்களாக்கி வென்றுவிடலாம் என எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் தேர்தலில் முதலீடு செய்த பணத்தை உங்களிடம் தான் கொள்ளையடிப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சம். நான் உங்களை மட்டும் நம்பியே களத்தில் நிற்கிறேன். என்னை நீங்கள் ‘மோதிரம்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவனாக இருப்பேன்.

உங்கள் மக்கள் தொண்டன்,

மா.வீரக்குமார்.
9.5.16

அலுவலக முகவரி: 81/1, வர்ணா நிலக்கரி இறக்குமதி நிறுவனம், டின் ரோஸ் எஸ்டேட், அண்ணா சாலை, சென்னை – 2.

வீட்டு முகவரி: எண்: 6, பிள்ளையார் கோவில் தெரு, வரதராஜபுரம், சென்னை – 44

தொடர்பு எண் – 044- 28549696/ 9797
வாட்ஸ் அப் எண் – +919841233737
மின்னஞ்சல்: mvkumarvarnaa@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.