தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பா.ம.க சார்பில் களம் காணும் பாலு, வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் அலுவலரை சந்தித்த பாலு, பணியில் இருந்த வட்டாட்சியர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை அவர் தலையில் கொட்டியும், முகத்திற்கு எதிரே எரிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தப் பணம், அதிமுக, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
வட்டாட்சியர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், பாமக வேட்பாளர் பாலு உள்ளிட்ட 47 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நல்ல கேள்வி……… பாவம் அவர் மட்டும் என்ன செய்வார். …இப்படியிம் சொல்லிவிட முடியாது ..இது போன்ற அரசியல் உலகில் எங்கும் இல்லை..
அத்துனை பேறும் கூப்பாடு போட்டு இந்த இரண்டு ஊழல் வாதிகளின் பணப்பட்டுவாடவை நிருத்த திரமை இல்லாத தேர்தல் அதிகாரிகள் நாட்டுக்கு அவமானம்..
LikeLike