அரவக் குறிச்சியில் மாட்டிக் கொண்டார்கள். 234 தொகுதிகளிலும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறார்கள் அதிமுகவும் திமுகவும். இந்த இரு கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக டிஸ்க்வாலிஃபை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும். தேர்தலை தள்ளி வைப்பது போதாது. குற்ற வேட்பாளரை கட்சியை ரத்து செய்யவேண்டும்.
தமிழ் ‘தி இந்துவில்” முதல்பக்கம் முழுமையும் திமுக விளம்பரம். இரண்டாவது பக்கம் முழுவதும் பாமக விளம்பரம் வந்துள்ளது.
ஆனால், அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைப்பு சம்பந்தமாக ஒரு பெட்டி செய்தி கூட இல்லை. ஆனால் ஆங்கில இந்துவில் முதல் பக்கத்திலே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த இரட்டை நிலை? இரவு 9 மணிக்கு வந்த அறிவிப்பை வெளியிடமால் தவிர்ப்பது என்ன ஊடக அறம்?
Lakshmanasamy Odiyen Rangasamy
மிஸ்டர் லக்கானி
ஆக்சுவலா நீங்க இன்னும் 233 தொகுதிக்கு தேர்தல தள்ளி வெக்கனும்
அப்புறம் தள்ளிவெக்கறதுன்றது இன்னா டைப்பு தண்டனெ
இது ஆருக்கான தண்டணெ
இந்த காரணங்கள் உண்மை எனில் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லவா?
அதே வேட்பாளர் எப்படி 23ந்தேதி நல்லவர் ஆவார்?
கே.சி.பழனிச்சாமி மீதோ, செந்தில் பாலாஜி அல்லது அன்பு நாதன் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தலை ஒத்தி வைத்தாலே, இந்த தேர்தல் நியாயமான வழியில் தான் நடக்கிறதென முட்டாள் ஜனங்களை நம்ப வைத்து விட முடியும் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிகிறது, வேறொன்றுமில்லை!!
அரவக்குறிச்சி – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அரவக்குறிச்சி போலவே அனைத்துத் தொகுதிகளிலுமே அதிமுக, திமுக இரண்டும் காசு கொடுத்து ஓட்டைக் களவாடுகின்றன. ஜனநாயகத்தை இந்த இர்ண்டு கட்சிகளும் கேலிக் கூத்தாக்குகின்றன.
அரவகுறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்தினால் பத்தாது… தீர விசாரித்து அணைத்து தொகுதியிலும் தேர்தலை நிறுத்த வேண்டும்.
அத்துடன் பணம் குடுத்தவர்களை தேர்தலில் நிற்க தடை போட வேண்டும்.
இதை நேர்மையாக செய்ய தேர்தல் ஆணையத்திற்கு திராணி இருக்கா???
வாக்களர்களிடம், கொடுத்தவர்கள் தாமதமாக களத்துக்கு வருவார்கள். எனவே இரண்டு கட்சிகளும் அந்த தொகுதியில் போட்டியிடக்கூடாது.
ஐயா லக்கானி ! ஊடக புலிகளே! எனக்கொரு டவுட்டு … விளக்குங்குங்களேன் ! அரவக்குறிச்சி தேர்தலை ஏன் தள்ளிவச்சீங்க ?
1] எல்லா வாக்காளர்களுக்கும் பணம் போய்ச் சேர கால அவகாசம் போதாதுன்னு மேலும் ஒரு வாரம் நீட்டிருக்கீங்களா ?
2] வாக்காளர்களிட்ட கொடுத்த பணத்தையெல்லாம் மீண்டும் திரும்ப வாங்கி கஜனாவில ஒப்படைக்க போறீங்களா ?
தேதி19க்கும் 26க்கும் இடையில் பெரிசா என்ன மாறிவிடப்போகிறது ….ஆட்சி அமைக்கப் போற கட்சிக்கு போணஸா அந்தத் தொகுதி கிடைக்கப் போகிறது அவ்வளவுதானே !
நீங்களும் உங்க ஜனநாயகமும் த்தூ .. ..த்தூ..
Karthikeyan N
ஜெயா டிவில்.. திமுக பணபட்டுவாடா.. செய்ததாக செய்தி.
கலைஞர் டிவியில் அதிமுக பணபட்டுவாடா செய்ததாக செய்தி.
தேர்தல் கமிஷன் இரண்டு பேரையும் காரிதுப்புனதுக்கப்புறமும்.
ஒருவழியாக அரவக்குறிச்சியின் மூலம் தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.
மற்ற 233 தொகுதிகளிலும் தன் விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்தி, கட்சிப் பாகுபாடில்லாமல் நீதியை நிலைநாட்டி, நாளை முதல் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தப்போகும் தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்.
மக்களாட்சியைத் தற்காலிகமாகக் கடக்க நினைக்கும் இவர்கள் நோக்கம் அதற்கு எதிரானது. சர்வாதிகாரத்தை நிறுவ நினைப்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் வழியாகவே மக்களாட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.