விஜய் பாஸ்கர்

இந்திய ஜனநாயகம் பற்றி கொஞ்சம் யோசித்தால் கூட நம்பிக்கையின்மையும் விரக்தியும் வந்து மன உளைச்சல் வந்துவிடுவதால் அது பற்றி பொதுவாக இந்தியர்கள் நினைப்பதில்லை என்று நினைக்கிறேன்.
அப்படி யோசிக்க விரும்பாத இந்தியன்களில் நானும் ஒருவன்.
2006 இல் இருந்து 2011 வரை திமுகவினரின் குடும்ப அராஜகம் கண்டு மனம் நொந்த முறையில்தான் 2011 யில் அதிமுகவுக்கு ஒட்டுப் போட்டான் தமிழன்.
அதிலும் திருமங்கலம் தேர்தலில் திமுக செய்த அட்டகாசம், தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் மூன்று அப்பாவிகளை கொன்றதை சொந்த குடும்பத்தின் நலனுக்காக கண்டுகொள்ளாமல் விட்டது போன்றவை மக்களை கொதிப்படைய செய்தன.
.
ரொம்ப பக்குவமானவர் என்று அவரது ரசிகர்களால் போற்றப்படும் கருணாநிதி கூட ஒரு நிருபரைப் பார்த்து “நீதான் கொன்ன நீதான் கொன்ன” என்று டென்சனாதை எல்லாம் பார்த்திருக்கிறோம்.
இது மாதிரி நிறைய எரிச்சல்களுக்காக அதிமுகவுக்கு தமிழன் ஒட்டுப் போட்டானேயன்றி அதிமுக மேலுள்ள பாசத்தினால் அல்ல.
இங்கே ஜெயலலிதா கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார்.
அதையொட்டி தமிழகமே இயங்ககூடாது என்று அதிமுகவினர் செய்த அராஜகத்தைப் பார்த்தோம்.
இதையெல்லாம் என் மனதை அதிகம் பாதித்த இந்திய ஜனநாயகத்தின் மேல் அதிகம் விரக்தியும் நம்பிக்கையின்மையும் வந்த மொமண்ட் ஒன்று இருக்கிறது.
2015 குடியரசு தினத்தன்று, நிகழ்ச்சியின் ஏற்பாடாக சென்னையில் பல அலங்கார ஊர்திகள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையில் வலம் வந்தன.
அந்த ஊர்திகளில் எல்லாம் ஜெயலலிதா படங்கள் இருந்தன.
அதைப் பார்த்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன்.
எப்படி அந்த அரசு மரியாதைக்கான ஊர்திகளில் ஜெயலலிதா படம் இருக்கலாம்? என்று உள்ளே பொங்கியது.
ஒரு குற்றவாளியின் போட்டோவை எப்படி ஊர்திகளில் வலம் வரச் செய்யலாம். அதற்கு எப்படி முதல் அமைச்சர் வணக்கம் வைக்கலாம்.
இந்த முதலமைச்சர் என்பது தனி மனிதன் அல்ல . அவர் தமிழக மக்களுக்காக ஆகி வருகிறார்.
இது என்ன ஜனநாயகம் என்ற கொதிப்பு வந்தது.
ஜனநாயகத்தை அதிகம் வெறுத்த கட்டம் அது.
அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்கும் அவற்றின் மக்கள் சேவை மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மக்கள் அவர்கள் மேல் வைக்கும் வெறுப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் இருக்கிறது. எப்படியும் நாலாவது வருசத்துல அதிமுக மேல ஒரு வெறுப்பு அலை வரும். அதனால மக்கள் நமக்குதான் ஒட்டுப்போடுவார்கள் என்று திமுகவினர் நினைப்பதும்,
இதே மாதிரியான சிந்தனையை அதிமகவினர் நினைப்பதும்தான் தமிழ்நாட்டுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் முக்கியமான சிக்கலாகும்.
இப்படி உரிமையாக நம்பிக்கையாக தமிழகத்து மக்கள் பற்றி இந்த இரு “ஜாதி இந்து கட்சிகளும்” நினைப்பதை முதலில் உடைக்கவேண்டும்.
ஆட்டோமெட்டிகாக அதிகாரம் நம் கைகளுக்கு வந்துவிடும் என்று நினைப்பதை உடைக்க வேண்டும்.
இதுதான் மக்களாகிய நம் முதல் குறிக்கோளாக இருக்கவேண்டும். இந்த காரணத்துக்காகத்தான் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இங்கே அனைவரும் இப்போதைய குறிக்கோள் அதிமுகவின் ஆட்சியை எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எடுத்து என்ன செய்வீர்கள்.
2016 டூ 2021 திமுக ஆட்சி செய்யுமா? அடுத்து 2021 யில் மறுபடியும் அதிமுகவை மறுபடியும் மாபெரும் ஆதரவோடு கொண்டு வர வேண்டுமா?
தும்மலை அடக்கி மறுபடியும் பெரிய தும்மலாக தும்முவீர்களா?
கடும் வெயில் அடிக்கிறது.
திமுக காலில் நிற்கிறோம். அது சுடுகிறது என்று அதிமுக காலில் நிற்கிறோம்.
மறுபடி அதிமுக கால் சுடுகிறது. திமுக காலில் நிற்கிறோம்.
இப்படி கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருப்பதற்கு பதிலாக அந்த வெயிலை விட்டு ஒடிவிடுவது பற்றி யோசிப்பது புத்திசாலித்தனம்.
அதற்காக இரண்டு அதிகாரமையத்துக்கு எதிராக கைகோர்த்திருக்கும் மக்கள் நல கூட்டணியை ஆதரிக்கலாம்.
சரி. மக்கள் நலக் கூட்டணியால் ஒட்டு பிரிந்து விட்டது. அப்படி ஒட்டு பிரிந்ததாலேயே திமுக அதிமுக ஏதோ ஒரு கட்சிக்கு சாதகமாகிவிட்டது. என்ன செய்வது?
பரவாயில்லை என்கிறேன்.
ஆனால் மக்கள் நலக்கூட்டணிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஒட்டும் நிச்சயம் திமுக அதிமுகவை சிந்திக்கவைக்கும்.
இந்தப் பக்கம் அந்த இரு கட்சிகளின் சர்வாதிகாரத்தை உடைப்பது பற்றிய நம்பிக்கையை மற்ற சிறுகட்சிகள் பெறும்.
இந்த நம்பிக்கையே ஜனநாயகத்துக்கு நல்லதுதான்.
தேமுதிக நிற்கிறதே அது இன்னொரு கழகக் கட்சிதானே என்று பலர் சொல்லிவருகிறார்கள்.
இப்போதைய ஒரே குறிக்கோள் திமுக அதிமுகவின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக இணையும் அனைத்து சக்திகளையும் ஆதரிப்பது மூலம் தமிழ்நாட்டில் நிலவி வரும் மன்னராட்சி முறையை ஒழிப்பதுதான்.
அதுதான் தமிழகத்தின் முதல் எதிரி என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே நாட்டின் நலம் கருதுபவர்கள் மக்கள் நலக் கூட்டணியைத்தான் ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறேன்.