வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று அதிமுக வேட்பாளர் நிலோபர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் சோஃபாவின் அடியில் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 8,000 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லீக் வேட்பாளர் செய்யது பாரூக் போட்டியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணியின் தமாகா சார்பில் ஞானசேகரனும் போட்டியிடுகின்றனர்,