மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

இளமதி சாய்ராம்

இளமதி சாய்ராம்
இளமதி சாய்ராம்
“பணத்தை எப்படி கொண்டு போய் சேர்க்குறதுன்னு தெரியல… ஒரே கெடுபிடியா இருக்கு…

வண்டிக்கு பெட்ரோல் போடுறதுக்காவது காசு கொடுங்கப்பா, எப்படி பிரச்சாரம் பண்றது..”

இவ்விரண்டு, வெவ்வேறு முனைகளின் குரலாகத்தான் இந்த தேர்தலை பார்க்கத் தோன்றுகிறது. இலவச அறிக்கைகள், கருத்துக்கணிப்புகளை பார்த்து குழம்பித்தவிக்கும் மக்களின் சித்திரமே கண்முன் ஓடுகிறது.

இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு தீர்மானமாக சொல்லமுடியால் இருப்பது இத்தேர்தலின் சுவாரசியம் என்றால், அதிமுக, திமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்த மக்கள் நல கூட்டணி ஆகப்பெரிய சுவாரசியம்.

அதிர்ச்சியானது, முகநூலில் தெறித்து, தெறித்து விழுந்த திமுக ஆதரவாளர்கள். வசையும், வெறுப்புமாக நண்பர்கள் கூட இந்த தேர்தலில் அதிர்ச்சிகரமான சம்பவங்களாக மாறிப்போயினர்.

மக்கள் நலக்கூட்டணி விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது ஏற்பட்ட பயம் இன்னும் அகலவில்லை. நிதானமில்லாமல் பேசுவது, மாற்றி மாற்றி முடிவுகளை எடுப்பது என ஒரு டீம் லீடர் கூட வைகோவை போன்று இருக்கக்கூடாது என்று நினைக்கவைத்தது… எல்லாம் ஒருபுறம் இருந்தாலும்,

மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு

அதிகாரத்தின் மீது தீரா வெறி, அரசியலை பணம் சம்பாதிக்கும் முதலீடாக பார்ப்பது, அரசியலதிகாரத்தை பயன்படுத்தி இயற்கை வளங்களை மிச்சம் வைக்கமால் சுரண்டத்துணிவது – இவையெல்லாம் ஒரு நாட்டை ஆள்பவரை இயல்பாக பாதிக்கும் குணாம்சங்கள் என்றாலும்… அவற்றையே அரசியலின் அடிப்படை குணமாக கட்டமைத்து ஆட்டம் போட்ட அதிமுக, திமுக கட்சிகளின் மீதிருக்கும் கசப்பை மக்கள் நலக்கூட்டணி சரி செய்ய முற்படும் என்பது எதிர்பார்ப்பு. அது பொய்த்தும் போகலாம்… அதற்கான முயற்சியையாவது மேற்கொள்வார்களா பார்க்கலாம்..!

நிற்க,

குடும்பமே வழக்கமா திமுக-வுக்கு ஓட்டுப்போடும். இந்த முறை அதை மடைமாற்றி மக்கள் நலக்கூட்டணி பக்கம் திருப்பியாயிற்று. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலக்கூட்டணியோட ஆதரவோட வரவேண்டும்… எனக்கென்னவோ குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் திமுக, மக்கள் நலக்கூட்டணியோட ஆட்சிக்கு வரும்னு தோணுது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.