கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் சீ.ஜெய்சங்கர் மீது வியாழக்கிழமை அதிகாலை கூலிப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவருடைய முகத்திலும் கையிலும் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் ஜெய்சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் பின்னணியில் அதிமுக வேட்பாளர் அ. பிரபு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் சீ.ஜெய்சங்கர் அவர்கள் இன்று அதிகாலை4:30 மணியளவில் அதிமுக வேட்பாளர் அ.பிரபு தூண்டுதலால் கூலிப்படை மூலமாக கொலை முயற்சி உள்ளாக்கப்பட்டுள்ளார் இதில் அவர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.