துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி, ப்யூன் வேலைக்கு ரூ. 8 லட்சம் லஞ்சம்: கழகங்களால் கறைபடிந்த பல்கலைக்கழகங்கள்!

முனைவர் கலைவாணன்

தமிழகத்தில் மார்ச் 1967ல் இருந்து கழகங்களின் ஆட்சிக்காலம் துவங்கியது. தமிழக முதல்வராக அண்ணா குறுகியகாலமே இருந்து 1969ல் மறைந்த நிலையில் நெடுஞ் செழியன் ஒருவாரம் தற்காலிக முதல்வ ராக இருந்தது போக, 10 பிப்ரவரி 1969ல் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் முதல்வரானார். 30 ஜூன் 1977 ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வரானார். அவர் இறந்த பின் ஜானகி ராமச்சந்திரன் 24 நாள் முதல்வ ராக இருந்தார். பின் 1989ல் கருணாநிதிமுதல்வரானார். 24 ஜுன் 1991ல் ஜெய லலிதா முதல்வரானார். அதன்பின், கருணாநிதி, ஜெயலலிதா என்று மாறி மாறிமுதல்வராக இருந்து தமிழகத்தை ஆண் டுள்ளனர். கழக ஆட்சிகள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்குகின்றன. இந்தக்காலகட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை என்ன ஆனது?சுருக்கமாக ஒற்றை வரியில் சொல்வ தானால் ஊழல்மயமானது. ஊழல் என்றால்இப்படி அப்படி அல்ல பல கோடிகளில் என்றாகிவிட்டது. தமிழ்ப் பாட்டி ஒளவை யார் மன்னர் ஒருவனை `வரப்புயர’ என்றுவாழ்த்தினாளாம். அதாவது வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல்லுயரும், நெல்லு யரக் குடி (என்றால் டாஸ்மாக் அல்ல) உயரும், குடி உயரக் கோன்(அரசன்) உயர்வான் என்று பின்னர் அதனை விரித்துச் சொல்வார்.

அதுபோலத்தான் இங்கே முதலில் உயர்வது, துணைவேந்தர்கள் நியமனத்துக்கான கோடிகள். அது 1990 களில் மிகுந்த கல்வி உள்ளிட்ட இதர தகுதி களும், சில சிபாரிசுகளும், ஆங்காங்கே கொஞ்சம் பணமும் என்றிருந்தது மெல்லலட்சங்களாக வளர்ந்து, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கோடிகளைத்தொட் டது. ஒன்றிரண்டு கோடிகள், அரசியல்செல்வாக்கு, கொஞ்சம் கல்வித் தகுதிஎன்றிருந்தது, அதிமுக ஆட்சிக்காலத்தில், கல்வித் தகுதி என்ற ஒன்று கூடத்தேவையில்லை, அரசியல் செல்வாக்கு, மந்திரிகளின் உறவினர் என்கிற அடையாளம், நான்கைந்து கோடிகள் என்றாகி, அதிமுக ஆட்சி முடியும் தருவாயிலுள்ள இப்போது, துணைவேந்தர் பதவியின் விலை சுமார் 10 முதல் 15 கோடிகளாகிவிட்டது.

தரங்கெட்ட துணைவேந்தராக, யுஜிசி கல்வித்தகுதி ஏதுமின்றி, மதுரையில் முன்னாள் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் என்ற ஒரே காரணத்தோடும், சில கோடி கட்சி நிதியோடும் கல்யாணி மதிவாணனை நியமனம் செய்தது, அதைத் தொடர்ந்த வழக்குகள், உச்சநீதிமன்றம் வரை சென்று நாறியது. உச்சநீதிமன்றமும் கூட, கல்யாணி மதிவாணனுக்குத் தகுதி உள்ளது எனச் சொல்ல வில்லை, தவறு நியமனம் செய்த தமிழக அரசினுடையதே என்பது போல் குமாரசாமிக்கு முன்னோடியாகப் பூசி மெழுகியது.

அப்புறமும் கல்வித் தகுதி குறித்த வழக்குகள் தொடர்கின்றன.மேலும் இத்தகைய துணைவேந்தர் பதவிகளைப் பெறுவதற்காக அவர்கள் தர வேண்டிய கோடிகளை, பலநேரம் மந்திரிகள் கொடுத்துவிட்டு, அவர்கள் பின்னர்ஒன்றுக்குப் பத்தாக வசூலித்துக் கொள் கின்றனர். அல்லது துணைவேந்தர் சாதி களில் உள்ள பெரிய தனவந்தர்கள் கொடுத்து, அவர்களும் ஒன்றுக்குப் பத்தாக வசூலித்துக் கொள்வதோடு தங்கள்சாதி சார்ந்த ஆட்களுக்கு வேலை, தாங்கள் சாதி சார்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறு வனங்களுக்கான அனுகூலங்கள் என்று அவற்றை வசூலிக்கின்றனர்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் கடைசி மூன்றாண்டுகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்கான விலை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சம் வரை கூட ஆனது. பேராசிரியர் பதவிக்கு ரூ.25 லட்சம் என்றானது. அடுத்த கட்டத்திலுள்ள, கிளார்க் பதவிக்கு ரூ.8 லட்சம் என்றானது, பியூன் போன்ற கடைநிலை ஊழியர் பதவிக்கு ரூ.3 முதல் 4 லட்சங்கள் என்றாகியது. அன் றாடக் கூலி வேலைக்குக் கூட, ரூ.50000ல் இருந்து ரூ.1 லட்சம் வரை விலை வைக்கப்பட்டது. இதுபோக, கட்டிட வேலைகளில் கமிஷன், அட்மிஷன், யுஜிசி நிதியைச் செலவழிப்பதில் என்று பல வகை யினங்கள். அதுபோக வளாகத்திலுள்ள மரங்களை வெட்டி விற்பது கூட உபதொழி லாயிற்று. உயர் பதவியில் உள்ளவர்கள், இரண்டு மூன்று விலையுயர்ந்த கார்களை வைத்துக் கொள்வது, வீடு களில் மிகவுயர்ந்த வசதிகளைப் பல்கலைக் கழகப் பொதுநிதியில் இருந்து உருவாக் கிக் கொள்வது, அஞ்சல் வழிக் கல்வித் துறையில் கொள்ளை என்று பல வகை களில் ஊழல் மயமாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2011ல் வந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்சொன்ன அத்தனை விலைகளும் அப்படியே இருமடங்காயின. உதவிப்பேராசிரியர் பத விக்கு 25 முதல் 30 லட்சம், பேராசிரியர் பதவிக்கு 35 முதல் 40 லட்சம் வரை, கிளார்க் பதவிக்கு 15 லட்சம், பியூன் பதவிக்கு ரூ.8 லட்சம், அத்தக்கூலி வேலைகளுக்கு ரூ.3 லட்சம். அவை போக மேற்சொன்ன பல வகைப் பணவரவு இனங்களில் இன்னும் அதீதக் கொள்ளையாகிவிட்டது. பல பல்கலைக்கழகங்களில் பென்சன் போன்றவைகளுக்காகப் பராமரிக்கும் கார்ப்பஸ் நிதியிலேயே கைவைக்கும் வேலை தொடங்கிவிட்டது.

கையில் காசு வாயில் தோசை என்பது போல, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களை, மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் அளவுக்கு காசு வாங்கிக் கொண்டு பணி நியமனங்களைச் செய்தார்கள். அரசிடம் கைமாற்றி விட்டதற்குப் பின்னணியில் அதனை விற்றவர்களுக்குக் குறைந்தது ரூ.10000 கோடிகள் வரை இந்த வகையில் வருமானம் பார்த்திருப்பர் என்கின்றனர்.கல்லூரிகளில் உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு உயர்கல்வி அமைச்சர் வைத்திருந்த ரேட் ரூ.7 லட்சமாம். நியாய உணர்வுள்ள ஆசிரியர் சங்கத் தலைவர்களுள் ஒருவர் ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் கிட்டத் தட்ட 40 ஆசிரியப் பணி இடங்கள் காலியாக இருந்துள்ளன.

மந்திரியைப் பார்க்கச்சென்றபோது, கூசாமல் ஒரு பணியிடத் திற்கு ரூ.7 லட்சம் வீதம் 2 கோடியே 80 லட்சம் கொடுத்துவிட்டு அதனை நீங்கள் நிரப்பிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இவர் பொறுக்கமாட்டாமல் உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா என்று கேட்டிருக்கிறார். அதற்கு மந்திரி சிரித்துக் கொண்டே இதுல வெக்கப்படுறதுக்கு என்ன இருக்கு தம்பி, நான் வாங் குனா நானா வச்சிக்கிடப் போறேன். அதது முறைப்படி போகவேண்டிய எடங்களுக்கெல்லாம் போகணும்ல என்றிருக்கிறார். இதனை முதல்வராக இருந்த அந்த ஆசிரியரே ஒரு தெருவோரக் கூட்டத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தார். எங்கே யார் கூப்பிட்டாலும் சாட்சி சொல்ல நான் வருகிறேன் என்று அவர் சொன்னார்.

சரி, கொடுக்கும் காசுகளை ஆசிரியர் எவ்வாறு தேற்றிக் கொள்கிறார்? சிக்கினவர்கள் அவர்களிடம் ஆராய்ச்சிக்குச் சேர வரும் மாணவர்கள். கலைப்புலத்தில் ஒன்றிரண்டு லட்சங்களாகவும், விஞ் ஞானப் புலமென்றால் 5 அல்லது அதற்கு மேலும் லட்சங்களை மாணவர்கள் அழ வேண்டியிருக்கிறதாம். மாணவர்கள் இவ்வகையில் தங்கள் அரசு உதவித் தொகையை இழந்து, விவசாயமோ, நடுத்தர வருமானமோ இருக்கும் தம் குடும்பத்தின் செல்வாதாரங்களையே இறுதியில்இழக்க நேர்கிறது. கிளார்க் போன்றவர்களும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகப் பார்த்துவிடுவார்கள், அதாவது பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கு வரும் போது பண வகைப் பட்ட நிபந்தனை போடுவார்கள்.

இந்தப் பியூன்கள்தான் எப்படி எட்டு லட்சத்தை வசூலிக்கப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. மாணவர் சேர்க்கை, புதிய படிப்பு களுக்கு அனுமதி தருதல், நிறுவனத்திற்கு புதிய மின்னணு வசதிகளைக் கொண்டு வருதல், இருக்கிற கட்டடத்துக்கே வெள்ளையடித்துக் கணக்கெழுதுதல், தேவையற்ற எந்திரங்களை வாங்குதல், அளவற்ற ஆடம்பரம் என்று உயர் கல்வியின் உச்சமாக உள்ள தமிழகப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் திமுக, அதிமுக அரசுகளால் ஊழலின் உச்சமாக மாற்றப்பட்டதுதான் அவர்கள் தமிழ் மக்களின் கல்விக்காகச் செய்த சாதனை.

இனி பல்கலைக்கழக வாத்தியார் வேலையைச் சாதாரணமான பொருளாதார வசதியுள்ள ஒருவர் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கல்வித் தகுதிகளோடு அரைக்கோடி பணம் கொடுப்பதற்கு இருந்தாலே அதனை நினைத்துக் கூடப் பார்க்க முடியும். பணமற்று எதுவும் இல்லை என்கிற வகையில் அவர்கள் இந்தப் பத்தாண்டுகளில் பல்கலைக் கழகங்களை வடிவமைத்திருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் கொள்ளை தனித்தொரு முதலாளியின் பக்கம் குவிக்கப்படுகிறதென்றால், அரசின் பல்கலைக்கழகங்கள் பல்முனைக் கொள்ளை மையங்களாக மாறிவிட்டன. பத்துக்கோடி, பதினைந்து கோடி என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டுத்தான் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் போடுகிறார்கள் கல்விக் காவலர்கள். இதுபோகப் பள்ளி அளவில் நடக்கிற கொள்ளைகள் தனி ரகம். மக்கள் நலக்கூட்டணி போன்ற கல்வி குறித்த உண்மையான அக்கறை உள்ள மாற்றுத்திட்ட அரசியல்வாதிகள் மாநில அதிகாரத்திற்கு வந்தாலொழிய வெறும் கல்வித்தகுதியை மட்டுமே மூலதனமாக வைத்துள்ள சாமானியருக்கு இனி பல்கலைக்கழகப் பதவிகள் எதுவும் எட்டாக்கனியே.

பணமற்று எதுவும் இல்லை என்கிற வகையில் அவர்கள் இந்தப் பத்தாண்டுகளில் பல்கலைக் கழகங்களை வடிவமைத்திருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் கொள்ளை தனித்தொரு முதலாளியின் பக்கம் குவிக்கப்படுகிறதென்றால், அரசின் பல்கலைக்கழகங்கள் பல்முனைக் கொள்ளை மையங்களாக மாறிவிட்டன.

நன்றி: தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.