சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு தன் கணவரின் பிரிவுத் துயரலிருந்து மீளாததே காரணம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கரின் மறைவுக்குப் பிறகு, தனது படிப்பைத் தொடரப் போவதாகவும் சங்கரின் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்றும் சொல்லி வந்த கௌசல்யாவுக்கு பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.
ஆனால், கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகக் காணப்பட்ட கௌசல்யா, முந்தினம் சங்கரின் சமாதிக்குச் சென்று ஒரு மணி நேரம் அழுதுகொண்டிருந்திருக்கிறார். வீட்டில் வெகு நேரம் இல்லாத கௌசல்யாவை சங்கரின் தம்பி தேடி, அவர் சமாதியில் இருப்பதைப் பார்த்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த சாணிப் பவுடரை குடித்து மயங்கி விழுந்த கௌசல்யா தற்கொலை முயன்றிருக்கிறார். உடுமலைப் பேட்டை மருத்துவமனையில் இருந்து தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
மனது கௌஸல்யாவிற்கு ஸரியாகவில்லை. கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும்.
LikeLike