“இனி நான் ஷுபம் அல்ல, என்னை ஷேக் என்றே அழையுங்கள்!”: ஓர் ஒடுக்கப்பட்ட மாணவனின் வெற்றிப் பயணம்!

சமீபத்தில் வெளியான யூபிஎஸ்இ தேர்வுகளில் 361-ஆம் இடத்தை பிடித்திருக்கிறார் 21 வயதான அன்சார் அஹமத் ஷேக். ஷேக்கின் அப்பா ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தன்னுடைய பெயரில் இருக்கும் அடையாளம் காரணமாக சமூகம் தன்னை ஒடுக்கி வைத்ததைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் இவர் குறித்து பேசவைத்திருக்கிறது.

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முதுகலை படிப்புக்காக எங்கே தங்குவது என்ற தேடலில் ஈடுபட்டபோது, என்னுடன் படித்த நண்பர்களுக்கு எளிதாக வாடகை இருப்பிடம் கிடைத்தது. ஆனால், என்னுடைய பெயர் காரணமாக எனக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை. இதிலிருந்து என் பெயரை சொல்லாமல் என் நண்பனின் ஷுபம் என்ற பெயரைச் சொல்லி வாடகைக்கு இடம் கேட்பது என முடிவு செய்தேன். அப்படித்தான் என்னை நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளருக்குத் தெரியும். இனி என் பெயரை நான் மறைக்கத் தேவையில்லை” என்கிறார் அன்சர் அஹமது ஷேக்.

“என்னுடைய அப்பாவுக்கு மூன்று மனைவிகள். என் அம்மா இரண்டாவது மனைவி. எங்களுடைய குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை. என் சகோதரர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். என் சகோதரிகளுக்கு படிப்பை நிறுத்திவிட்டு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். நான் யூபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று சொன்னபோது என் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்” என்று முடிக்கும்போது ஷேக்கின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது.

மூன்று ஆண்டுகள் 10-12 மணி நேரம் இந்தத் தேர்வுக்கு படித்ததாக சொல்லும் ஷேக், “நான் ஒடுக்கப்பட்டவன். ஐஏஎஸ் அதிகாரியாக மக்கள் பணியாற்றும்போது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடுவேன்” என சொல்கிறார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

One thought on ““இனி நான் ஷுபம் அல்ல, என்னை ஷேக் என்றே அழையுங்கள்!”: ஓர் ஒடுக்கப்பட்ட மாணவனின் வெற்றிப் பயணம்!

  1. // என்னுடைய அப்பாவுக்கு மூன்று மனைவிகள். என் அம்மா இரண்டாவது மனைவி. எங்களுடைய குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை. என் சகோதரர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். என் சகோதரிகளுக்கு படிப்பை நிறுத்திவிட்டு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள்//

    With three wifes and a big family of children how could they afford education, rather than mud slugging make people to follow a small family norm – then they will have money, inturn a good life and education.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.