சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம்.
திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார்.
இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!
இதைக் காரணம் காட்டி உடன் யாருமில்லை என்பதை வைத்து ஆறுமுகத்தை நிர்வாகம் வெளியேற்றிவிட்டது.
எழுந்து நகரவும் முடியாததால் மருத்தவமணை வளாகத்துக்குள்ளளேயே அவர் கிடந்தார். இதைப் பொறுத்துக்கொள்ளாத நிர்வாகம் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வளாகத்தின் வெளியில் நடுரோட்டில் அனாதையைப் போல் தூக்கி வீசிவிட்டது. இன்று காலை இது குறித்து மருத்தவமணை அதிகாரி சையத் அசீஸ் பாஷா உசைனி அவர்களிடம் தோழர் வே. பாரதி முறையிட்டார். இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் “உங்களால் என்ன முடியுமோ பாத்துக்கொள்ளுங்கள்” என்று நிர்வாகம் திமிரோடு பதிலளித்து விட்டது.
இந்த நொடியிலிருந்து அவர் எங்கள் பொறுப்பு எங்களில் ஒருவர் இரவும், பகலும் அவருடனேயே இருந்து பார்த்துகொள்வோம் என்று தோழர் பாரதி உறுதிகொடுத்தும் சையத் அசித் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
திரு ஆறுமுகத்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உரிய நடைமுறையின்றி ஆறுமுகத்தை தெருவில் தூக்கி போட்டதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.
நோயாளி ஒவ்வொருவரையும் மனித கண்ணியத்நோடு நடத்தப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி ( 10-05-2016) 3 மணி அளவில் அண்ணா வளைவு அருகில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனை வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தை தமிழ் சமூகம் அறியும் விதமாக நேரில் வந்து செய்தி எடுத்து தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு உரிமையுடன் வேண்டுகிறேன் ..
9865107107./ வே. பாரதி.
90 03 406819/ திலீபன் மகேந்திரன்