உடல் முழுக்கக் கத்திக் குத்துக் காயம்.
மூச்சுத் திணறல், கழுத்து நெறிப்பு அறிகுறிகள்.
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட அடையாளங்கள்.
என்ன நடந்தது என்று சொல்ல உயிரோடில்லை.
குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆயினும் தேசம் பெரிதாகக் கொந்தளிக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவியவில்லை.
ஊடகங்களும் ஓரளவுக்குமேல் கண்டுகொள்ளவில்லை.
என்ன காரணம்? ஜிஷா ஒரு தலித் பெண் என்பதைத் தவிர?
கேரளத்தில் நடந்த கொடுமையானாலும் தமிழகத்தில் நம் ஆவேசக் குரலை ஒலிப்போம்.
இன்று இடதுசாரி பெண்கள் கூட்டமைப்பு இணைந்து மெரினாவில் மாலை 5 மணிக்கு மனித சங்கிலி நடைபெறவுள்ளது. உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.