நடைபெறவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன. தற்போது ஆளும் ஜெயலலிதாவும் மதுவிலக்கை படிப்படியாக அமலாக்குவேன் என அறிவித்துள்ளார்.
ஆனால், டாஸ்மாக் விற்பனை குறித்த கலால் வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில் ஏப்ரல் மாதத்தில் பீர் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக முழுவதும் பரவியுள்ள 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூலம், தமிழகத்தில் 70 ஆயிரம் பேர் குடிக்கின்றனர். 2300 கடைகள் பீர் விற்பனை செய்கின்றன.
முகப்புப் படத்தில் டாஸ்மாக்கில் பீர் வாங்கும் அதிமுக தொண்டர்கள். படம்: பிரதாபன் ஜெயராமன்