வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் சி.பி.எம்-ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகவல்லி. பணமும் அதிகாரமுமே அரசியலை தீர்மானிக்கும் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் தி.மு.க அ.தி.மு.க வின் அதிகார ஆதிக்க சக்திகளை எதிர்த்து களமிறங்கியிருக்கிறார் கற்பகவல்லி.

போராட்டங்களும், எளிமையுமே கம்யூனிஸ்ட்களின் அடையாளம், அதுவே இவரின் மிகப்பெரிய பலம். மொத்த குடும்பமும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் இயல்பாகவே பொதுவுடைமை சிந்தனையுடன் வளர்ந்தவர். பள்ளி இறுதி வருடம் படிக்கும் போது தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படித்த இவர், அதன்பால் ஈர்க்கப்பட்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்கான போராட்டக்களத்தில் இணைகிறார். அன்று தொடங்கிய அவரின் போராட்டம் இன்று வரை மக்களுடன் தொடர்கிறது.

2006 முதல் 2015 வரை அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டம் மூலம் மன்னார்கோவில் மற்றும் சுப்ரமணியபுரம் பொத்தை, வீரவநல்லூர் மக்களுக்கு பட்டா வாங்கித் தந்திருக்கிறார்.  அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் 5000க்கும் மேற்பட்ட மக்களுக்கு மாற்றுத் திறனாளிகள் பென்சன், விதவை பென்சன் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வாங்கி கொடுத்ததில் இவரின் பங்கு பிரதானமானது, 2008ம் வருடம் வெள்ளாங்குளியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, சம்பளம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக 180 ரூபாய் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டது. மேலும் வேலை செய்யும் இடங்களில் குடிநீர், கைக்குழந்தைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காருக்குறிச்சி ஊராட்சி மன்றத்துக்கு முன்பாக இவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் இவருடைய அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.

.அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாபநாசம் துவங்கி கோபாலசமுத்திரம் வரையிலான குண்டும் குழியுமான சாலைகளை பழுது பார்க்க வேண்டும், வீரவநல்லூர் ஊருக்குள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அரசின் கவனத்தை ஈர்க்க இவர் நடத்திய பிணம் புதைக்கும் போராட்டத்தின் விளைவே இன்று அந்த பகுதியில் சொகுசாக பயணம் செய்யும் நல்ல சாலைகள். காவல்துறையின் அராஜகம், அரசு அதிகாரிகளின் அலட்சியம், சாலைப் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, கல்விக் கொள்ளை என என்ன பிரச்சனையானாலும் அங்கே முதலில் நிற்கும் நபராக இருப்பவர் கற்பகம்.

அதே போன்று பத்தமடை பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்த தலித் மக்களின் பயன்பாட்டுக்குரிய பொதுக் கிணறை மீட்டவர்.  டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என இவர் நடத்திய போராட்டத்தின் விளைவாக வீரவநல்லூரில் இரண்டும் காருக்குறிச்சியில் வெள்ளாங்குளியில் ஆகிய இடங்களில் தலா ஒன்றுமாக நான்கு கடைகள் ஊருக்கு மத்தியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு உரிய சம்பளம், கட்டுமான தொழிலாளிகளின் குறைந்த பட்ச உரிமைகள் என 15க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களில் சிறை சென்றுள்ளார்.

அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சாலைத் தொழிற்சாலைகளில் பெண்களின் வறுமை, குடும்ப சூழலை பயன்படுத்தி நிகழும் மிகக் குறைந்த சம்பளம் மற்றும் பாலியல் கொடுமைள் ஆகியவைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடி வருகிறார். போராட்டமே வாழ்க்கையாய், கட்சி கொடுக்கும் அலவன்ஸ் பணத்தின் குடும்பத்தை நடத்தி வரும் தோழர். கற்பகத்தை எப்போதும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சர்வசாதாரணமாக பார்க்க முடியும். மிக எளிதாக அணுக முடியும். பிரச்சனைகளை குடும்பத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது போல பேசி விட முடியும் என்கிறார்கள் அம்பை தொகுதியைச் சேர்ந்தவர்கள். 

“அதிமுக, திமுக பணமுதலைகளுக்கு மத்தியில் போட்டியிடுகிறேன். திமுக வேட்பாளர்  எளிதில் அணுக முடியாதவர், அவர் மீது அதிருப்தியோடு திமுகவினர் இருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் என்கிற கோபம் மக்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு மாற்றாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணி இருக்கிறது. வெற்றிக்கான வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது” என்கிறார் கற்பகம்.

One thought on “வேட்பாளர் அறிமுகம்: யார் இந்த கற்பகவல்லி?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.