மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு செல்வாக்கை உண்டாக்கியிருக்கிறது.
பீம்ராவ் செய்த பணிகள் என்னென்ன?
சமீபத்தில் வாக்கு சேகரிக்கும் இடங்களில் பேசிய க.பீம்ராவ், “பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பீர் கம்பெனி அகற்ற பெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 11வது மண்டலத்தில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 357 கோடி ரூபாய் பெற்றுத் தந்துள்ளேன். வளசரவாக்கம் குப்பை மேடு அகற்றப்பட்டுள்ளது. சாலைகள் மேம்படுத்தப்பட்டு, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்கப்படுகிறது. சின்ன போரூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அஞ்சலகத்தை மூட முயற்சித்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
“அடுத்தமுறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், அனைத்து பகுதிகளுக்கும் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் அனைத்து பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தாசில்தார் அலுவலகம், போரூர் லட்சுமி நகரில் குப்பை மேடு அகற்றப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படும். பெண்கள், குழந்தைகளுக்கென்று சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார்.
க. பீம்ராவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராமின் உரை கீழே…