வேட்பாளர் அறிமுகம்: தொகுதி பக்கம் தலைகாட்டாத விஜயதரணியை எதிர்த்து களமிறங்கும் ஆர். செல்லசுவாமி!

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமாகா அணிசார்பில் சிபிஎம் விளவங்கோடு தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி போட்டியிடுகிறார்.

ஆர்.செல்லசுவாமி 10 ஆண்டுகள் ஏழுதேசம் பேரூராட்சி தலைவராக பணியாற்றியவர். 10 ஆண்டுகள் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட்டு வருபவர். 2011 முதல் குமரியின் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும், மாவட்ட திட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தனது 30 ஆண்டு கால பொதுவாழ்வில் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளராக உள்ளவர். குமரி மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர். தனியார் காடுகள் சட்டம், கஸ்தூரி ரங்கன் அறிக்கை ஆகியவற்றால் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உண்ணாவிரதம், முற்றுகை போராட்டங்களை முன்னெடுத்தவர். ரப்பர் விலை வீழ்ச்சி, முந்திரி தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட பல்வேறு போராட்டங்களை வழி நடத்தியவர்.

தற்போது இந்த தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் விஜயதரணி தான்கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபிறகு,ஏதேனும் விழாக்களின்போது மட்டுமே தொகுதியில் தலைகாட்டுகிறார். தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அவற்றை சரிசெய்வதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியினரே சொல்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களை பற்றியே கவலை கொள்ளாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினரால் மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால் மக்கள், மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் மக்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

விளவங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிக்க பகுதியாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர்.செல்லசுவாமிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.