லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“நான் பெருமைப் படுகிறேன். பயம் காட்டி பிரித்தாளும் பேச்சுகளுக்கிடையே நம்பிக்கையை லண்டன் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” என்று தன் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சாதிக் கருத்து தெரிவித்தார்.
சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த கோல்டு ஸ்மித், கானை இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாதிக் கான் தொடர்ந்து இதைப் பேசினார். “பயம் நம்மைக் காப்பாற்றாது; நம்மை அது பலவீனப்படுத்தும். பயத்தின் அரசியல் நம் நாட்டில் வரவேற்கத்தக்கதல்ல”.
தொழிலாளர் கட்சியின் தலைவராக தீவிர இடதுசாரியான ஜெரிமி கார்பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பழமைவாத கட்சிகள் கோலோச்சிய இங்கிலாந்து அரசியலில் புதிய மாற்றத்தின் அறிகுறியாக ஜெரிமி இருப்பார் என கணிக்கப்பட்டது. அதுபோல, ஜெரிமிக்கு நெருக்கமான சாதிக் கான், ஜெரிமி தலைமை ஏற்றிருக்கும் தொழிலாளர் கட்சி லண்டன் மேயர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
சாதிக் கானின் பெற்றோர், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடிபெயர்ந்து, பிறகு அங்கிருந்து இங்கிலாந்து சென்று லண்டனில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஜெரிமி கார்பின் கானுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து!