இந்திய அரசு – உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவருடைய பேட்டியின், முக்கியமான பகுதிகளை எழுத்து வடிவில் கீழே அளித்திருக்கிறோம்.
*வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இந்தியாவிற்குள் தாராளமாக இறக்குமதி செய்வதற்கு பாரதீய ஜனதா அரசு, உலக வர்த்தக அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருகிறது.
*வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய உணவு தானியங்களை இங்கு வணிகள் செய்வதற்கு தடையாக இருக்க கூடிய ரேஷன் கடைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடிய தானியங்கள், சிறந்த விவசாயத்தை செய்வதற்காக விவசாயிகளுக்கு அளிக்க கூடிய மானியங்கள் இவை அனைத்தையும் நிறுத்துவதாக மோடி அரசு, உலக நாடுகளுக்கு ஒப்புதலை, ஒப்பந்தங்களாக எழுதி கொடுத்து வந்திருக்கிறார்கள்.
*இதன்படி, மிக குறைந்த விலையில், தானியங்களை , வெளிநாடுகள், இந்தியாவிற்குள் வணிகம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் இருக்ககூடிய விவசாயிகளுக்கு, இந்திய அரசு எந்தவிதமான மானியத்தையும் குறிப்பாக உரம், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித மானியத்தையும் அளிக்க மாட்டார்கள்.
*இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசி , கோதுமை உள்ளிட்ட தானியங்களை இந்திய அரசு கொள்முதல் செய்யாது. இந்திய அரசு இந்த தானியங்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், இவற்றை பாதுகாக்க வேண்டிய “இந்திய உணவு கழகம்” இந்த தானியங்களை சேமித்து வைக்க மாட்டார்கள்.
*“இந்திய உணவு கழகம்” தானியங்களை சேமித்து வைக்கவில்லை என்றால், உணவு கழகத்தை நம்பியுள்ள ரேஷன் கடைகளில், நியாய விலையில், குறைந்த விலையில் உணவு தானியங்களை விற்பனை செய்வது நின்று போய்விடும்.
*வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்களுக்கு , உள்நாட்டில் எந்தவித போட்டியும் இருக்ககூடாது என்றும் அரசே குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் தானியங்களை விற்பதனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் எந்தவித சந்தையும் இருக்காது வியாபாரமும் இருக்காது என்பதானால், ரேஷன் கடைகளை, ஒட்டுமொத்த கொள்முதலை, தானியங்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை ஒட்டுமொத்தமாக மூடுவதாக இந்திய அரசு , சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளது.
*விவசாயிகளின் விலை பொருட்களை, தானியங்களை, அரசே கொள்முதல் செய்து வந்ததால்தான் அவர்களால், இதுவரை விவசாயத்தை பாதுகாக்க முடிந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு இனிமேல், விவசாயிகளின் தானியங்களை கொள்முதல் செய்யாது.கொள்முதல் செய்யவில்லை என்றால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கே விற்பார்கள் ? தக்காளிகளை சாலையில் கொட்டுவதை போல, அரிசியையும் கோதுமையையும் சாலையில் கொட்ட வேண்டிய சூழல் ஏற்ப்படும்.
*அடுத்ததாக ரேஷன் கடைகளை மூடுவது. அரசே நியாய விலையில் தானியங்களை கொடுத்தால், வால்மார்ட், வெயிட்ரோஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் , உணவு தானியங்களை விற்க முடியாது என்பதனால், போட்டி போட்டி லாப விலையில் விற்று சமாளிக்க முடியாது என்பதனால், ரேஷன் கடைகள் மூடப்பட இருக்கிறது. இதைதான் இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
*எதற்காக இந்த ஒப்புதல் என்றால் ? உலக நாடுகளுக்கிடையே தடையற்ற ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த்தத்தை போட்டிருக்கிறார்கள். அதன்படி உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் சுங்க வரி ஒரே அளவாக மாற்றப்படும் என்ற விதியை கைகொள்வதற்காக, இந்திய அரசு இத்தனை விஷயங்களையும் பலி கொடுத்திருக்கிறது.
*இதனால் இந்தியாவிலிருக்கும் பெரிய நிறுவங்கள் பெரும் பலனடைவார்கள். ஆனால் இந்திய விவசாயிகள் அழிக்கப்படுவார்கள். இங்கே உணவு கொள்முதல் நிறுத்தப்படும். ரேஷன் கடைகளை படிப்படியாக மூடப்படும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படக்கூடிய உணவு பொருளுக்கு பதிலாக, அதற்கான பணத்தை உங்கள் வங்கி கணக்கில் அளிக்கிறோம் என்று கூறி, மோடி அரசு, மானியத்தை முற்றிலும் நிறுத்தப்போகிறது.
*ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்காது. சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது விலையில், அல்லது வாங்க முடியாத விலையில் உணவு தானியங்களை விற்பனை செய்வார்கள். சந்தைகளில் உணவுகளை வாங்க ஆரம்பித்த காரணத்தினால்தான் கடந்த நூற்றாண்டுகளில் பஞ்சம் ஏற்பட்டது. இந்தியாவில்தான் செயற்கை பஞ்சமே உருவாக்கப்பட்டது. தானியங்களை பதுக்குவதுனால்தான், செயற்கை பஞ்சம் உருவாக்கப்படுகிறது. இதை போலவே அத்தியாவசிய தானியங்களுக்கு விலை ஏற்றுவதோ இறக்குவதோ பதுக்குவதோ நடைபெறும்.
*ஆனால், இவை எல்லாம் மறுக்கும் மோடி அரசு, உணவு பாதுக்காப்பு மசோதாவில்தான் கையெழுத்து போட்டு வருவதாக கூறி வருகிறது. 2014-ம் ஆண்டோடு அந்த கதை முடிந்து விட்டது. அதற்கு பிறகு 2015 டிசம்பரில் , மானியத்தை நிறுத்துவது, ரேஷன் கடைகளை மூடுவது போண்ட இந்த ஒப்பந்தத்தில்தான் மோடி அரசு கையெழுத்திட்டு வந்திருக்கிறது.
*இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் காலத்தில்தான், இந்தியாவில் திட்டமிடப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. மாட்டுக்கறி பிரச்சனை தொடங்கி, ரோஹித் வெமுலா தற்கொலை வரை அத்தனை விஷயங்கள் மூலமாகவும், இந்த ஒப்பந்தம் பற்றிய விவாதங்கள் திசைதிருப்பப்பட்டன.
இதனிடயே, பேஸ்புக்கில் சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள தமிழ் வீடியோவில் மத்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக வந்த செய்திகள் முற்றிலும் தவறு என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
பல உயிர்களை பறிகொடுத்து, மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு கூட வாய் திறக்காத மோடி அரசு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அமைப்பின் குற்றச்சாட்டிற்கு அலறி அடித்து, இப்படி ஒரு மறுப்பறிக்கையை எதற்க்காக வெளியிட வேண்டும் என்று மிகப்பெரும் கேள்வி எழுகிறது நமக்குள்.
“விவசாயிகளுக்கு மானிய நீக்கம், மின்சார மானியம், உர மானியம் அளிப்பது நிறுத்தப்படும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவும் இல்லை.” என்று மத்திய அரசு தற்போது விளக்கமளித்தாலும் கூட, கடந்த காலங்களில் பாரதீய ஜனதா அமைச்சர்களில் “மானியங்களை குறைக்க வேண்டும்;நிறுத்த வேண்டும்” என்கிற பத்திர்க்கை பேட்டிகள் எல்லாம், இந்த ஒப்பந்தம் பற்றிய சந்தேகங்களை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
(மத்திய அரசின் மறுப்பறிக்கையின் லிங்க்..)
திருமுருகன் காந்தி தவறான தகவல்களை தருகிறார். இந்தியா TFA என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளது. இதற்கும் விவசாய மானியங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. TFA- Trade Facilitation Agreement. இது பற்றி புரிதல் இல்லாமல் அவர் பேசியிருக்கலாம். உணவு மானியம் AoA Agreement on Agriculture உடன் தொடர்புடையது. இந்தியா மான்யங்களை குறைப்பது, பொது விநியோகத்தை நிறுத்துவது என்பதெற்கெல்லாம் இடமில்லை என்று டிசம்பர் 2015ல் நைரோபி மாநாட்டில் கூறிவிட்டது. இதைத்தான் அமைச்சகத்தின் செய்திகுறிப்பு தெளிவாக எடுத்துரைத்தாலும், ஊடகவியலாளர்கள் உண்மையை தெளிவுபடுத்தாமல்
“விவசாயிகளுக்கு மானிய நீக்கம், மின்சார மானியம், உர மானியம் அளிப்பது நிறுத்தப்படும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவும் இல்லை.” என்று மத்திய அரசு தற்போது விளக்கமளித்தாலும் கூட, கடந்த காலங்களில் பாரதீய ஜனதா அமைச்சர்களில் “மானியங்களை குறைக்க வேண்டும்;நிறுத்த வேண்டும்” என்கிற பத்திர்க்கை பேட்டிகள் எல்லாம், இந்த ஒப்பந்தம் பற்றிய சந்தேகங்களை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.” என்று எழுதுவது ஏன். கொஞ்சம் கூட முயற்சி செய்து படித்து புரிந்து கொள்ள மாட்டீர்களா. அமைச்சர் கீச்சுகளுக்கும் பதில் தருகிறார் என்பதால் இந்த மறுப்பு அலறியடித்துக் கொண்டு செய்யப்படவில்லை என்பதை உணருங்கள்.சிலர் அவர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரே மறுப்பு வெளியாகியுள்ளது.
LikeLike
நானும் கொஞ்சம் பதட்டமாகிவிட்டேன். இப்படி ஒரு ஒப்பந்தம் நடந்ததாக உறுதியான தகவல் கிடைக்கவில்லை . உங்கள் பதில் உண்மையை விளக்கியது நன்றி. இதற்கு அவர் மீண்டும் மன்னிப்பு கேட்டாரா?
LikeLike