33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது,
நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமல்ல என்று சொல்லகூடிய பொன்.ராதா போன்ற கங்கானிகளை அமைச்சர்களாக கொண்ட நாட்டில் இது சாதாரணம்தான்.
மெல்ல மெல்ல கடுமையான பஞ்சத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது, உண்மையில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் வெய்யில் தண்ணீர் பஞ்சத்திர்கெல்லாம் அரசு எப்படி பொறுப்பாக முடியும், இயற்கை பேரிடர்கள் இறைவனோட திருவிளையாடல் என்பார்கள், கொல்கத்தாவில் பாலம் இடிந்தபோது இப்படித்தான் சொன்னார்.
ஆனால் உண்மை அதுவல்ல, கடந்த மூன்று வருடமாக நெருக்கி வரும் இந்த வறட்சியை எந்த அரசும் கண்டுகொள்வதாய் இல்லை, மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் காலங்களில் முதலாளிகளுக்கு 21 கோல்ப் மைதானங்கள் எந்த கூச்சமும் இல்லாமல் அமைக்கப் பட்டிருக்கின்றன.
கோக் போன்ற பன்னாட்டு கம்பனிகள் உறிஞ்சும் தண்ணீரை பற்றி தனியாக சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை, பூனே போன்ற இடங்களில் நடக்கும் ரோஜா சாகுபடிக்கு ஏக்கருக்கு 217 சென்டிமீட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, ஒப்பந்த ஆலைகளுக்கான கரும்பு பாசனம் கணக்கு வழக்கில்லாமல் பெருக்கப் பட்டிருக்கிறது, நெல் கோதுமையை விட 3 மடங்கு தண்ணீரை உறிஞ்சக் கூடிய பயிர்களை யாருக்காக நம் தலையில் கட்டுகிறார்கள்?.. பிறகு மணல் மாபியா, இவையெல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு விவசாயி தற்கொலைக்கு காரணங்கள்..
எல்லா மாநிலங்களிலும் இதே கதைதான், மணலுக்கும் தண்ணீருக்குமான தொடர்பை
விளங்கினால் வறட்சியிலும் வெப்பத்திலும் உழலும் மக்களே மணல் மாஃபியாகளோடு கட்டி உருளும் நிலை வரும்.. தண்ணீர் கிடைக்காமல் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை மூடுவது இந்தியா முழுதும் நடக்கிறது.
விவசாய அகதிகளாய் நகரங்களில் குடியேறுவோர் பற்றிய சென்செக்ஸ் குறிப்புகள் சுத்தமாக கணக்கு வழக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
மதிய அரசின் கவலை வேறு மாதிரி இருக்கிறது, இவ்வளவிற்கு பிறகும் கொடுக்கிற பணத்த வாங்கிட்டு நிலத்த கொடுத்தாத்தான் என்னவாம், ஏன் இந்த விவசாயிகள் அடம் பிடிக்கிறார்கள், நில அபகரிப்பு சட்டத்தை முதலாளிகளுக்கு எப்போது முடித்து கொடுப்பது போன்ற புலம்பல்களே..
இதெல்லாம் ஒரு விசயத்தை நியாபகப் படுத்துகின்றன, 2007 மன்மோஹன்சிங்
காலத்தில் எம். எஸ். சுவாமிநாதன் அமைப்பு நடத்திய கூட்டத்தில் உலக வங்கியின்
துணைத்தலைவரால் ஒரு கருத்து பகிரப்படுகிறது..
அது 2015ல் இந்தியாவில் 40 கோடி மக்கள் விரும்பியோ விரும்பாமலோ
கிராமங்களில் இருந்து நகரங்களுக்குள் வந்திருப்பார்கள் என்று கணக்கிட படிக்கிறது, அப்போதிருந்த நில அபகரிப்பு திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கான்ட்ராக்ட் விவசாயம் போன்றவற்றை பற்றியும் விவாதிக்கப் பட்டிருக்கிறது, அவர்கள் 2020ல் தமிழ்நாட்டில் மாட்டும் 70 சதவீத மக்கள் நகரங்களுக்குள் குடியேறி இருப்பார்கள் என்று கணக்கிடுகிறார்கள், பஞ்சாபில் இது 65 ஆகவும் உத்தர பிரதேசத்தில் இது 55 ஆகவும் கணக்கிடுகிறார்கள்,
இவர்கள் சோசியக்கார்கள் அல்ல இந்தியாவின் பாலிசி மேக்கர்கள், தவிர இது கணிப்பும் அல்ல திட்டம்..
விவசாயிகளை நகரங்களுக்குள் விரட்டி விட்டு, நிலங்களையும் விவசாயத்தையும் கார்பரேட்களுக்கு திறந்துவிடுவார்கள், இது அமெரிக்க ஐரோப்பாவில் ஏற்கனவே இருக்கும் மாடல்தான்.
இப்போது நைரோபி தீர்மானங்கள் நமக்கு ரேஷன் இருக்காது என்று
அறிவிக்கின்றன, 2017க்கு பிறகு பருத்தி மானியம் இல்லை என்கிறார்கள், இன்னொரு பக்கம் 330 மில்லியன் விவசாயிகள் தண்ணீரின்றி தவிப்பு . தற்கொலை, தலை தெறிக்க நகரங்களுக்குள் ஓடி வரும் போக்கு. நில ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், அபகரிப்பு சட்டம். ஊமையான ஊடகங்கள், மௌனமான அரசு.. திட்டமிட்டபடி எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?
அன்பே செல்வா, சமூக அரசியல் விமர்சகர்.