“திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியாற்ற கலைஞர் விசுவாசி ஒருவர் கூட இல்லையா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி.
கடந்த 2015-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து தற்காலிக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுக தலைமை மீது பரபரப்பு புகார் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்த அவர், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிமுகவில் இணைவேன் என்றும் சொல்லியிருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்த தயாநிதி, மீண்டும் இதே தொகுதியில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.