நடைபெறவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கருத்து கணிப்பை வெளியிட்டு வருகிறது தினமலர் நாளிதழ். இதில் முன்னுக்குப் பின் புறம்பான தகவல்கள் இடம் பெறுவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுதி வருகிறார்கள். செவ்வாய்கிழமை வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் திமுகதான் அதிக வாக்குகள் பெறும் ஆனால் திமுக வேட்பாளர் வெற்றி பெறமாட்டார் என்று எழுதப்பட்டிருந்தது.
அதுபோல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப் பேட்டை தொகுதியை கோவை மாவட்டத்தில் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதைக் கூற அறியாமல் கருத்து கணிப்பு நடத்திய லட்சணம் இதுதானா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.