ஊடகங்கள் வெளியிடும் கருத்து கணிப்புகள் குறித்து சில சமூக ஊடக பதிவுகள்…
முரணான முடிவுகள் சொல்லும் கணிப்புகள்!
ஒரு டி வி அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! இன்னொரு டி வி திமுக தான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! வேடிக்கை என்னவென்றால் இரண்டு டி வி களும் தங்களதே விஞ்ஞானபூர்வமான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு என்று மார்தட்டிக் கொள்கின்றன. அப்படியெனில் இரண்டும் ஏன் முற்றிலும் முரணான முடிவை சொல்கின்றன? இதிலிருந்தே விஜயகாந்த் சரியாகச் சொன்னதுபோல இது கருத்து திணிப்பு என்பது உறுதியாகிறதல்லவா? அந்தந்த டிவி நிர்வாகத்தின் ஆசைதான் இந்தக் கருத்துக் கணிப்புகளே தவிர உண்மை அல்ல. இத்தகைய திணிப்பு வேலையை தேர்தல்ஆணையம் அனுமதிப்பது அநியாயம். இது சமமான ஆடுகளத்தை சகல கட்சியினருக்கும் ஏற்படுத்திதர வேண்டிய கடமையிலிருந்து ஆணையம்
தவறுவதைச் சுட்டுகிறது.
கருத்துக் கணிப்புக்களை கவனித்தீர்களா? என்று கேட்டார்கள். இங்கே கருத்துக் கணிப்பு நடத்த தரவுகள் தேவையில்லை என்று எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். லயோலா பழைய மாணவர் சங்கம்( அவர்கள் எல்லோரும் இப்போது எந்தத் துறையில் இருக்கிறார்கள்? )நியூஸ் 7 தினமலர் ஆனந்தவிகடன் போன்றவை திமுக சார்பாகவும் தினத்தந்தி அதிமுக சார்பாகவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இத்தகைய போக்கு பத்திரிக்கைகளின் இதழாளர்களின் மேல் உள்ள நம்பிக்கையை தகர்த்துவிட்டது.
ஜகத் கஸ்பர் ஊரறிந்த திமுக ஆள். அவரை வைத்து மேற்கு மண்டலத்தில் திமுக முந்துகிறது என்கிறார்கள். அதிமுக தோல்வி அடைந்த தேர்தல்களில் கூட மேற்கு மண்டலம் அவர்களை கைவிட்டதில்லை. இதெல்லாம் பார்க்கும் போது இணையப் போராளிகளின் விருப்புக்களைப் போலவே பத்திரிக்கைகளின் உள்ளார்ந்த விருப்பம் மட்டுமே தெரிகிறது.
மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். அதனால் அலையில்லாக் கடலை ஆளாளுக்கு அலசுகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் சிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனந்த விகடன் குழுமம் இப்போது விலைக்கு வாங்கப்பட்டது என்பது தெரியவருகிறது. ஓரளவிற்கு நடுத்தர வர்க்கம் விரும்பும் பத்திரிக்கையானது இப்போது தன்னுடைய கால்களை இழந்துவிட்டது. வைகுண்டராஜன்கள் பச்சைமுத்துக்கள் தான் இனி நமக்கு செய்திகள் தருவார்கள் என்பது அச்சமூட்டக் கூடியது. நானும் என் நண்பரும் எல்லோரிடமும் கேட்பது, உன் ஆசையைத் தனியாகச் சொல், உள்ள நிலவரத்தை உள்ளபடிச் சொல் என்பது. கண்ணுக்கெட்டிய தூரம் அப்படி ஒரு நல்லவனையும் காணல.
2001 ல கல்லூரில படிக்கற போது இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கருத்து கணிப்பு நிறுவன ஊழியர் நம் கல்லூரிக்கு வந்து திருப்பூர் தொகுதிக்கு நீங்கள் கருத்து கணிப்பு எடுத்து தர வேண்டும். உங்களுக்கு இவ்வளவு பணம் தருகிறேன்,இதில் 500 பார்ம் இருக்கிறது. இந்தாருங்கள் நான் 2 நாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போனார். 2நாளில் சுமார் 100 பார்ம் மட்டுமே முடிக்க முடிந்தது. பின்னர் வந்த அவரிடம் 1 வாரம் டைம் கேட்க அவரோ முடிய முடியாது இன்று நான் அனுப்ப வேண்டும்,என்று சொல்லி அவரே ஐடியா கொடுத்தார். நான் சாப்பிட்டு 1மணி நேரம் கழித்து வருகிறேன் என்றார். பின்னர் 1 மணி நேரத்தில் ஆள் பார்ப்ம் ரெடி!!! பார்ம் ல இருந்த கையெழுத்து எங்க பஸ் டிரைவர்,கண்ரக்கடர், டீக்கடைகாரர்,கம்மங்கூள் கடைக்காரர் இதுல பெரிய கொடுமை அப்ப பேமஸ்சா இருந்த அசாருதீன்,சங்கீதா பிஜ்லானி கையேழுத்து முதல் கொண்டு இருந்தது தான் . இது தான் மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக கண்டறிந்த #கருத்துகணிப்பு
எதுக்கு காலேஜ் ஸ்டூடன்ஸ் வச்சு க.க நடத்தராங்க!!! இதுனால தான்!!!
Animals are Beautiful People என்றொரு திரைப்படம். திரைப்படம்கூட அல்ல, ஆவணப்படம் போல. God Must be Crazy திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடி. இதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். மனிதர்கள் ஓரிண்டு காட்சிகளிலேயே வரும் அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும்.
மனிதனுக்குத் தாகம், தண்ணீர் தேவை. தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தெரியாது. அதற்காக ஒரு தந்திரம் செய்வான்.
ஒரு பாறையில் இருக்கிற பொந்துக்குப் போவான். குரங்கின் பார்வையில் படுகிற வகையில், அந்தப் பொந்துக்குள் கடலைகளைப் போட்டு விட்டு ஒதுங்கி விடுவான். அதைப் பார்த்த குரங்கு, அவன் அகன்றதும் பொந்துக்குப் போகும். உள்ளே கையை விட்டு கடலைகளை எடுக்கும். ஆனால் அதன்பிறகு கையை வெளியே எடுக்க முடியாது. ஏனென்றால், கடலைகள் அதன் முஷ்டியில் இருப்பதால் கடலையையும் விடாமல் முஷ்டியும் நீட்டாமல் வெளியே எடுக்க முடியாது.
மாட்டிக்கொண்டு தவித்த குரங்கைப் பிடித்துக் கட்டி விடுவான். அதை ஒரு மரத்தில் கட்டி, பக்கத்தில் சில மரப்பட்டைகளைப் போடுவான். அந்த மரப்பட்டைகளை சுவைத்துத் தின்னும் குரங்கு.
உண்மையில் அந்த மரப்பட்டை தாகத்தை அதிகரிக்கச் செய்யும் மரப்பட்டை. அதைத் தின்ற குரங்கு தாகத்தால் தவிக்கும். மனிதன் அதை அவிழ்த்து விட்டு விடுவான். குரங்கு ஒரே ஓட்டமாக ஓடும். மனிதன் பின்னாலேயே ஓடுவான். குரங்கு நேராக மலையின் மேலே உள்ளடங்கி இருக்கும் ஒரு சுனைக்குப் போய் தண்ணீர் குடிக்கும். ஆக, மனிதனுக்கு தண்ணீர் கிடைத்து விட்டது.
*
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசையும். மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் இது பேராசை என்பதும் தெரியும். அதே சமயத்தில் திமுகவும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வந்துவிடக்கூடாது என்பதே என் கருத்து. 2006-11 பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்திய காலத்திலேயே திமுக தலைமைக் குடும்பம் ஆடிய ஆட்டம் எல்லாம் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.
இந்தக் கருத்தை முன்வைக்கிறேன் என்பதற்காக ஏதோ அரைவேக்காடுகளின் பதிவுகளில் இடுவதுபோல நாகரிகமற்ற கமென்ட்களை இட்டு அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிற என்னை உசுப்பாதீர்கள்.
அப்புறம்…
மேலே இருக்கிற கதையை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.சர்க்காரியாவிலிருந்து சாராய ஆலைகள் வரை நிறையவே சரக்கு கைவசம் இருக்கிறது.