விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வானமாதேவியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாணவி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலை கழற்றி திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன்,
“நேற்று வானமாதேவியில் தேர்தல் பரப்புரையின் போது நந்தினி என்கிற மாணவி தனது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி அன்பளிப்பாக கொடுத்தார்….
“என் கழுத்திலிருந்த செயின் இனி எங்க அண்ணனிடம் இருக்கும்”” என சொல்லி எனக்கு அணிவித்தார். அது வெளிச்சம் தொலைக்காட்சி நிதியில் சேர்த்து கொள்ளப்பட்டது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.