தேமுதிக தலைவர் விஜயகாந்த், ட்விட்டரில் மக்களின் கேள்விகளுக்கு ஞாயிற்றுக் கிழமை பதிலளித்தார். இதில் ஒருவர், “சார், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்? (வைகோ தவிர)” எனக் கேட்டிருந்தார்.
அதற்கு விஜயகாந்த் அளித்த பதில், “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!”
அன்பின் கேப்டன், சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து?
விஜயகாந்த் பதில்: கவலைப் படுவதில்லை.
தொங்கு சட்டமன்றம் அமைந்தால் உங்கள் ஆதரவு யாருக்கு?
விஜயகாந்த் பதில்: கேள்வியை மாற்றி என்னிடம் கேட்டு விட்டீர்கள்,
நீங்க அரசியலுக்கு வந்தப்ப மக்கள் நம்பினாங்க. ஆனா இப்ப கோமாளியா தான் பாக்கறாங்க. இது உங்களுக்கு தெரியுதா?
விஜயகாந்த் பதில்: நிழல் வேறு நிஜம் வேறு. மக்கள் புரிந்து கொள்வார்கள்.
உங்க கூட்டணியோட பலம் என்ன?
விஜயகாந்த் பதில்: உங்கள் கேள்வியில் பதில் இருக்கிறது.