யார்ரா அந்தக் கபாலி?

ஒடியன்

ஒடியன்
ஒடியன்

வைணவத்தில்

1 வடகலை
2 தென்கலை இருந்ததைப்போலவே

சைவத்துக்குள்

1 வார்மம்,

2 பாசுபதம்,

3 காளாமுகம்,

4 பைரவம்

5 மாவிரதம்,

6 கபாலிகம்,

என ஆறு உட்பிரிவுகள் இருந்தது

ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமான பிரிவுகள்,

இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது தமிழ் வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல். இன்னும் எளிமையாகச் சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை!

ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ரா பில்டப்புகள் செய்து கபாலீகத்தை லபக்கென்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது ஆனால் காளமுகம் செரித்துக்கொள்ளமுடியாத ஒரு பிரிவினர் தனித்தே வாழ்ந்தனர்


’கபாலிகல்.. எளியமக்கள் பிரிவினர். அவர்களின் உறைவிடம் மயானக்காடு. அவர்கள் தானம் வாங்கி உண்ண பயன்படுத்திய பாத்திரம் மண்டை ஓடு’. முக்தியடைய அவர்கள் கடைபிடித்த பஞ்சமகரம் என்னும் தாந்தீரிகம் சாதாரண மனிதர்களின் அன்றாட நடவடிக்கைதான்

1 மாத்யம் (கள்ளு)

2 மைதுனம்(போகம்)

3 மைச்சியம்( மீன்)

4 மாம்ஸம் (கறி)

5 மதுரம்


கபாலிகத்தையும் புத்தத் துறவிகளையும் கேவலமாய்க் கலாய்க்கும் சமஸ்கிருத நாடகம்தான் மத்தவிலாசம். இது அந்தணர்களுக்கு பல்லக்கு தூக்கிய பல்லவ அரசனால் எழுதப்பட்டது

நாடகம் இப்படித்தொடங்குகிறது…

சத்யசோமன் என்னும் கபாலி, தன் மனைவி தேவசோமாவோடு சரக்கடிக்கப் போகிறார். அங்கே அவர்கள் கையில் வைத்திருந்த உணவு உன்ணப்பயன்படுத்தும் திருவோடு (மண்டையோடு) காணாமல் போகிறது. அதைத்தேடு தேடென்று தேடுகிறார்கள் ஆனால் அது கிடைத்தபாடில்லை. தொலைந்து போகும்போது அந்த மண்டையோட்டில் கொஞ்சம் மாமிசம் இருந்திருக்கிறது அதனால் அதை நாயோ அல்லது ஒரு புத்த துறவிதான் எடுத்திருக்கவேண்டும் என சத்தியசோமன் எண்ணுகிறான்.

எதிரே வந்த புத்த துறவியிடம் சத்திய சோமன் வம்பிழுக்கிறான்.பாசுபதன் என்னும் இன்னொரு துறவி இருவரையும் விலக்கிவிட்டு நாட்டாண்மை செய்கிறான். நடுநிலைநக்கி பசுபதன் போட்ட மொக்கையில் மண்டைகாய்ந்த புத்த துறவி தொல்லை தொலையட்டும் என்று தனது சொந்த திருவோட்டைசத்தியசோமனிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்.

அந்த நேரம்பார்த்து ஒரு நாய் திருடு போனதாய் சொல்லப்பட்ட கபாலத்தைக் கவ்விக் கொண்டுபோகிறது அதை ஒரு பைத்தியகாரன் பிடுங்கிக்கொள்கிறான். பைத்தியகாரனிடம் பிடுங்கப்பட்ட கபாலஓடு இறுதியில் சத்திய சோமனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இங்கே எண்ட் கார்டு போட்டுவிடுகிறான் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்.

எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பெருக்கி வகுத்தா இந்த கபாலிகள் யார்ன்னு புரிஞ்சுக்கலாம்!

ஒடியன், எழுத்தாளர்; சமூக செயல்பாட்டாளர்.

2 thoughts on “யார்ரா அந்தக் கபாலி?

  1. புத்த மதம் என்பதே இந்து மதத்தை எதிர்த்து வளர்ந்த மதம் என்றிருக்கையில் அதையும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று உள்ளடக்கியதே இந்துத்துவா…கபாலி என்பது புத்தரைக் குறிக்கும். அது கபாலீஸ்வரர் ஆனதே இந்துத்துவா…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.