பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீஸர் மே 1 ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட சில மணி நேரங்களில் கபாலி டீஸர் வைரலாக, சமூக வலைத்தளங்களில் கபாலி பட பேச்சே முதன்மையாக இருக்கிறது.
கபாலி டீசரில் அரசியல் அடிமைகளுக்கு ஒரு செய்தி இருக்கு….
கொஞ்சம் நிமிரவும்…
#கபாலிடா
ஆனால் மணிரத்னமோ சங்கரோ எடுக்கும் படங்கள் இப்படி அணுகப்படுகிறதா என்பதோடே பொருத்தி பார்க்கிறேன்!
எவனாவது கபாலி பட டீசர விமர்சிச்ச ஆதிக்க சாதி வெறியன் ஆக்கிருவேன் பாத்துக்க
காபாலிடா – அந்த low angle shot சொல்கிறது..
இத்தன காலம் எங்கள குனிய வெச்சு பாத்த
தேவர் மகனே , சின்னக் கவுண்டனே , சபாஷ் நாயுடுவே..
இப்போ அண்ணாந்து பாருங்கடா..
கபாலிடா..
நெருங்குடா..
மிஸ்டர் சபாஷ் நாயுடு.. this is our சபாஷ் கபாலி.
“தமிழ்ப் படங்கள்ல இங்க மரு வச்சுக்கிட்டு மீசைய முறுக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு நம்பியாரு,’ஏ,கபாலி’ அப்படின்னு சொன்னவொடனே குனிஞ்சு, ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே அந்தக் கபாலினு நெனச்சியாடா?………..#கபாலி டா…………..”
அட சொல்லத்தான் முடியுமா…!
தம்பிகளா.. நீங்கள்லாம் ரிட்டயராகும் போதுகூட, இவர் இதை விட இளமையா வந்து மிரட்டிக்கிட்டே இருப்பார்!
#Kabalida #KabalaiTeaser #SuperstarRajinikanth
“தமிழ்ப் படங்கள்ள, இங்க மருவ வச்சுகிட்டு மீசைய வச்சுகிட்டு லுங்கிய கட்டிகிட்டு நம்பியாரு ஏ கபாலி அப்பிடின்னு சொன்னவுடனே,குனிஞ்சு சொல்லுங்க எசமான் அப்பிடின்னு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலின்னு நெனைச்சியாடா…”
கபாலிடா(வேறடா)
-டீஸரில் ரஜினி பேசும் ஒரே வசனம்.இதற்குப் பின்னால் தான் எத்தனை அர்த்தங்கள்.வாழ்த்துகள் பா.ரஞ்சித் குழுவினருக்கு.
KABALI : Resignifying a established notion
கபாலி என்றால் பொது புத்தியில் உள்ள ஒரு அடியாள் என்ற பிம்பத்தை உடைத்து ஒரு தலைவன் ஆக கூட இருக்க முடியும் என்கிறது.
“தமிழ் படத்துல ‘கபாலி’ன்னு கூப்பிட்டதும்,
முகத்துல மருவு வச்சுக்கிட்டு,
கைலிய தூக்கிக்கட்டிக்கிட்டு,
கையைக் கட்டிக்கிட்டு
சொல்லுங்க எஜமான்னு
வந்து நிக்கிற கபாலின்னு
நினைச்சியாடா?
கபாலிடா”
50K views but 111K likes in a few hours!! Neruppudaaa!!!
ச்பாஷ் ரஞ்சித்!
மகிழ்ச்சி/////
கபாலி….///////
Ezhil Arasan
தமிழ்த்திரைப்படங்களாலும் பத்திரிகைகளாலும் மேட்டுக்குடியினராலும் கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கும் பெயர் ‘கபாலி’! கபாலி என்ற பெயருள்ள நபர் எப்போதும் கைலி கட்டி அதன் மேல் பச்சை பட்டை பெல்ட் போட்டுக்கொண்டு அடியாளாக ரவுடியாக குப்பத்தில் இருப்பார் என்ற பிம்பத்தை உடைத்து கபாலிக்கு கோட் சூட் அணிவித்து கெத்து காட்டியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டலாம்! படத்தில் தனக்கேயுரிய ஸ்டைலான சிரிப்போடு “கபாலினா என்ன மருவும் மீசையும் வச்சிக்கிட்டு கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி நிற்குற ஆள்னு நினைச்சிட்டியா? இது கபாலிடா” என்று ரஜினி பேசும் வசனம் உண்மையாகவே அதிர வைக்கிறது!