“கடைசி மூச்சுள்ளவரை நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருப்பேன்”: தினமலர் செய்திக்கு தா.பா. பதில்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் அதிமுகவில் இணையவிருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. இதை மறுத்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் .
“அ.தி.மு.க.வில் நான் இணைய போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த வேளையில், எங்கள் ஊரில் நானும் மாணவர்கள், இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் கட்சிக்கு ஆதரவாக சுவரில் எழுதி, துண்டுப் பிரசுரம் தயாரித்தோம்.
காவல்துறை எங்களை கைது செய்து, மாஜிஸ்திரேட்டு முன்னாள் நிறுத்தியது. அப்போது எனக்கு 14 வயது. அன்று தொடங்கி இன்று வரை நான் கம்யூனிஸ்டாகத்தான் வாழ்ந்து வருகிறேன். என் கடைசி மூச்சுள்ள வரை நான் கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன். மரணமடையும் போதும் நான் மார்க்சியவாதியாகவே மரணமடைவேன்.
நான் அதிமுகவில் இணையவிருப்பதாக வந்துள்ள செய்தி துரும்பளவு கூட அடிப்படை ஆதாரமற்ற கடைந்தெடுத்த பச்சை பொய். அரசியல் பற்றி, விவாதங்கள், விமர்சனங்கள் வரலாம். ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது பொது வாழ்க்கையை சிதறடிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு என் மகன் மீது அவதூறு செய்தி சொல்லப்பட்டுள்ளது. என் மகன் அவதூறு வழக்கு தொடர்வதாக உள்ளார். நானும் கட்சியிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர்வது பற்றி முடிவு செய்வேன்” என்று தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.