மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் பெண் வேட்பாளர் சாராளை ஆதரித்து பேசிய சீமான், அப்போது பேசியவற்றில் முக்கியமானவைகளை கீழே அளித்திருக்கிறோம்.
“அரிசி வைத்து அதிமுகவும் திமுகவும் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். வாங்கி சாப்பிடமுடியவில்லை. அது கட்டுப்படியாகவில்லை என்பதால் ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். அதையும் வாங்க வக்கில்லை. இப்போது இலவச அரிசி.
ஜெயலலிதா கூட்டத்திற்கு போனால் 200 ரூபாய். ஒரேடியாக போனால் இரண்டு லட்சம். கூட்டிட்டு வாங்க. தூக்கிட்டு போங்க என்ற ஆஃபர் அதிமுகவில் அறிவித்திருக்கிறார்கள்.
கியூபா அதிபர் பிடலும், அமைச்சர் சே குவேராவும் கரும்பு வெட்ட வயலுக்குச் சென்றார்கள். ஆனால் இந்தியா, விவசாயப் பொருட்களுக்கு பாலைவன நாடுகளிடம் கையேந்தி கொண்டிருக்கிறது.
கமிஷன், கமிஷன் என்று வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை விற்கும் ப்ரோக்கர்களைத்தான் ஆட்சியாளர்களாக வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்திய நாட்டின் பிரதமர் இந்திரா காந்தி, குடியரசு தலைவர் ஆகியோர் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்த மானத்தமிழன் பெருந்தலைவர் காமராஜர். ஆனால், இங்கே ஜெயலலிதா அமர்ந்திருக்க, அவர் முன் குனிந்து போகிறார்கள். நத்தை மாதிரி. ஏன் நீங்கள் எல்லாம் பல்லே விளக்குவதில்லையா ? இதுவா தமிழன் ???
எந்த மாநிலத்தில் எந்த முதலமைச்சர் சாராயம் காய்ச்சுகிறார்? மானத் தமிழன் மண்ணில்தான் கருணாநிதி காய்ச்சுகிறார். ஜெயலலிதா காய்ச்சுகிறார்.
படிச்ச பிள்ளைங்க நீங்களாவது பார்த்து வாக்கு போடுங்கள். மறுபடியும் “ரெட்டலை, ச்சூரியன். ரெட்டல, சூரியன். கையை கொண்டு போனா கை குறுகி குஷ்டம் ஆகிற போகுது. வந்துர போகுது. அம்பது வருஷமா ரெண்டு சின்னத்துக்கு வோட்டு போட்டும், ஒன்னும் நடக்கலைல. அதான் இப்ப மெழுகுவர்த்தி சின்னம் வந்துருசுள்ள. அதுல வோட்டு போடு. இந்த வாட்டி கலைஞர் ஐயாவே மெழுகுவர்த்திக்குதான் வோட்டு போடா போறார். உதயசூரியனுக்கு வோட்டு போடலாம் அப்படியே போயி, கை தடுமாறி மெழுகுவர்த்தில கொண்டு வந்து விரலை வைக்க போறார்.
அப்போ இலை மலர்ந்தால் ஈழம் மலராதா ?
LikeLike