நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
*சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் வினவினார்.
இதற்கு பதில் அளித்த கமல் “முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்” என்றார்.
இதனிடையே… #சபாஷ் நாயுடு படத்தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவர் மகன், சண்டியர், விருமாண்டி படங்களால் ஏற்பட்ட சாதிக்கலவரங்களின் வடுக்களே மறையாமல் இருக்கிற சூழலில், மீண்டும் ஜாதீய பெயருள்ள படமா என்று சமூக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
‘தேவர் மகன்’ என்று படமெடுத்து தமிழில் சாதிப் பெயர்களைப் படத் தலைப்பாக வைக்கும் சகாப்தத்தைத் தொடங்கிவைத்தவர் கமல்ஹாசன். அதற்குப் பின்னால் தமிழ் சினிமாவில் நடந்த சாதியப் பெருமித அனர்த்தங்களும் அபத்தங்களும் அதிகம். இடைநிலைச் சாதிப் பெருமிதங்களுக்கு உரம் போட்டு வளர்த்த சினிமாக்கள் அதிகம் வந்தன.இப்போதுதான் தமிழ் சினிமா அந்தமாதிரியான அபத்தங்களில் இருந்து விலகி வேறுதிசையில் நடைபோட முயலும்போது மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ என்று கமல்ஹாசன் சாதிப்பெயரை டைட்டிலாகச் சூட்டுவது நியாயமல்ல. தமிழில் டைட்டிலுக்கா பஞ்சம்?
ஜாதி பெயரில் சினிமா டைட்டில் வைப்பதை அரசு ஏற்கிறதா?
*விடுதலை சிறுத்தைகள் அரியலூர் மாவட்டம்
சபாஷ் நாயுடு என்கிற படத்தில் நடிக்கும் திரு. கமலஹ்ாஸன் அவர்களே சபாஷ் பறையனார் என்று படம் எடுத்தால் நடிபீர்களா. அரசியலில் உங்களுக்கு எதற்கு இந்த இலவச புத்திமதி.
சாதிக்கலவர காலத்தில் தேவர் மகன்;வந்தேறி அரசியல் காலத்தில் சபாஷ் நாயுடு!!!! சேற்றில் மீன் பிடிக்க தெரிந்தவர் கமல்ஹாசன்!
சபாஷ் வெளக்குமாறு#sabash#naidu
தேவர்மகன், சண்டியர் வரிசைல ‘சபாஷ் நாயுடு’. போங்கடா போங்கடா, கமல் பெரியாரிஸ்ட்டுடா..
ஆதிக்க சாதி வெறிக்கு இது போன்ற படங்களும் ஒரு காரணமே….#சபாஷ்நாயுடு என்னடா தலைப்பு இது..செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டிங்கடா…
‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமலுடன் பிரம்மானந்தம் இணைந்திருப்பது சூப்பர் செய்தி. சமீபகாலமாக காணாமல் போயிருந்த கமல் இதில் பழைய கமலாக மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். நாயுடு என சாதிப்பெயரை வைப்பது உறுத்துகிறது என்றாலும் கமல் நம்மூர் தமிழ்நாஜிக்களைப் போல சாதியை போற்றிப்புகழ்கின்றவர் அல்லர். சமகாலத்தில் புழக்கத்தில் இருக்கும் விஷயங்களை நகைச்சுவைக்கு பயன்படுத்துவது கொலைக்குற்றமும் அல்ல. சபாஷ் நாயுடுவுக்கு வாழ்த்துகள்.
சபாஷ் நாயுடு…தனது படங்களுக்கு இனிமேல் சாதிப்பெயர் வைக்க மாட்டேன் அப்டின்னு கமல் சொன்னதா ஞாபகம்….
90களில் தேவர் சமூதாயதாயத்தை கதாப்பாத்திரங்களாக்கி வணிகமாக்கி தேவர் வீட்டு பிள்ளை ஆன கமலஹாசன் சாதி மாறி நாயுடு வீட்டு பிள்ளை ஆகிறார் . #சபாஷ் நாயுடு
சபாஷ் நாயர் (1) … சபாஷ் மேனன் (2)
- நவ்யா 2. லட்சுமி
அது என்னையா சபாஷ் நாயுடு, ஏன் சபாஷ் பல்ராம் என்று வைக்க வேண்டியதுதானே?, எப்படியும் இன்னும் ஒரு 10 வருடம் கழித்து இது போல தலைப்பு வைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கத்தான் போகுரீர்கள். அது சரி, சாதி யை வைத்து காசு பாக்கும் பழக்கத்தையே ஏதோ ஒரு திராவிட கட்சிதான் தான் கொண்டு வந்தது என்று சொல்லிடலாம். இருக்கவே இருக்கிறார்கள் அடிமைகள் தாங்கி பிடிக்க.
*Kanchi Selvamஏற்கனவே..அந்தாளு படம்னா..பல்லு குச்சி விக்கறவன் கூட தடை கேட்டு கேஸ் போடுவான்..இதுல ஜாதி பேரோட தலைப்பு வேற.. #சபாஷ் நாயுடு
கமலோட அடுத்த படம் சபாஷ் ” நாயுடு “… தயாரிப்பு “லைக்கா” … எலக்ஷன் மட்டும் இல்லனா நிறைய கட்சியளுக்கு செம தீனியா இருந்திருப்பாரு கமல்.
“சபாஷ் நாயுடு” என்று மநகூ’யின் ஒருங்கணைப்பாளரை கலாய்க்கும் கமலை வன்மையாக கண்டிக்கிறோம்னு இன்நேரம் யாராவது கிளம்பியிருக்கனுமே
எப்படியும் டைட்டில் மாறிடும்…
என்னய்யா ஒரு தெலுங்கு காரன் எனக்கு தெரிந்தது கூட தமிழ்க்காரன் உனக்கு தெரியல.. நீ இப்படி இருந்தா தமிழ் எப்படி வாழும்?……அது, உங்கள மாதிரி தெலுங்கர்கள் யாராவது வாழ வைப்பாங்க! #சபாஷ்_நாயுடு
இளையராசாவை போன்ற சமூகத்தைப் பற்றிய புரிதலற்ற தற்குறி இங்கே இல்லை என்பது போலத் தான் தெரிகிறது.
“சபாஷ் நாயுடு”.கமல்ஹாஸனுக்கு இளையராஜா கொடுத்த தலைப்பு.
சபாஷ் நாயுடு : கமல்ஹாசன்
இன்னைக்கு இங்க ஒரு சாதி சண்ட கன்பார்ம்.எதுக்கும் குத்த வச்சி உக்காந்திருப்போம்
#சபாஷ்நாயுடுஅப்படினா#வேஸ்ட்_ஜெயலலிதாவா?
*சிவா
பூச்சி நாயகன் படத்திற்கு பெயர் சபாஷ் நாயுடு.இதுவே சபாஷ் தேவர்,சபாஷ் கவுண்டர் இப்படி பெயர் வைத்திருந்தால்’இன்னேரம் போராளிகள் பொங்கிருப்பாரகள்.அடிக்கிற வெயிலுக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்.குறிப்பாக இந்த வே.மதிமாறன் போன்ற அர வேக்காடுகள் இது பெரியார் பூமிடாவ்வ்வ்.. என கொட்டை தெறிக்க கத்தியிருப்பார்கள்.
இந்த பூச்சி நாயகன் கமல் அரசியலை கவனித்து பாருங்களேன்..விருமாண்டி,தேவர் மகன் திரைப்படத்தில் அருவாளோட’போஸ் கொடுத்தார்.சபாஷ் நாயுடு போஸ்டர்ல’பைக் ஓட்றாப்டி..ஒரு மாறுதலுக்கு சபாஷ் நாயுடுவின் கக்கத்தில் அருவாளையை’அல்லது குனிந்தவாறு துண்டேயோ கொடுத்து பாருங்களேன் மிஸ்டர் கமல்ஹாசன்.திரையானாலும் சரி,தரையானாலும் சரி..ஆதிக்கசாதி,ஆண்ட பரம்மபரை தலித்,தாழ்த்தப்பட்டவன், போன்ற vinyl’sticker கள் எல்லாம் காலம் காலமாக தமிழ் சாதிகள் மீதே ஒட்டவீங்க அப்படித்தானே’..
சினிமாவை சினிமாவாக’பாருங்கள்’சிவா என யாரும் இங்கே வந்து விடாதீர்கள்.ஒருவனின் எழுத்தாலும்,படைப்பாலும் எப்பேற்பட்ட மாற்றத்தையும் கொண்டு வரமுடியும் என’நம்பும்’ஆள்’நான்.
தம்பி…….. சபாஷ் நாயுடு படம்…..வைகோவின் வாழ்க்கை குறிப்புனு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவருப்பா……. பாவத்த ஒரண்டை இழுக்காதீங்க…..
சபாஷ் நாயுடு தமிழ் வார்த்தையா?.வரி விலக்கு க்கு போகையில சபாசு நாயுடு ஆகுமோ?
சபாஷ் நாயுடு!கமலஹாசனின் புதுபட பெயராம்
20 தமிழர்களை சுட்டுகொன்ற சந்திரபாபு நாயுடுவை ஆந்திரா சென்று அவன் அமைக்கும் அமராவதி தலைநகர் திட்டத்தை பாராட்டிவிட்டு வந்தவன் தான் கமல்..தமிழர்களை கொன்றதை மறைமுகமாக பாராட்டும் விதத்தில் தான் இந்த பெயரை திருடன் கமல் வைத்துள்ளான்!
*Palai Karthik feeling எரிச்ச BEEP ஆ இருக்குது frown emoticon.
“சபாஷ் நாயுடு” என்று பெயர் வையுங்கள் என்று கமலுக்கு பரிந்துரை செய்ததே இளையராஜாவாமே !முன்பு “தேவர் மகன்” என்று பெயர் வைக்க சொன்னதும் இதே இளையராசா தான் !
“தேவர் மகன்” படம் வெளி வந்த பின் சாதியால் தென்னகம் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டார்கள் !திருந்தவும் மாட்டார்கள் … சராசரி வியாபார நோக்கில் செயல்படும் கூத்தாடிகள்
சபாஷ் நாயுடு – அதாவது அடுத்த முதலமைச்சர் விஜயராஜூ நாயுடு வுக்கு வாழ்த்துக்கள் .கமல ஆசன் ஒரு தீர்க்கதரிசி டே
அண்ணன் சீமானுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்…சபாஷ் நாயுடு சபாஷ் .அக்ஹ்ஹா …கொடி பிடிக்க ஒரு மேட்டர்டா …..தேங்க்ஸ் முப்பாட்டான்னு ..இன்னேரம் ஜாலியாகி இருப்பார்
“சபாஷ் நாயுடு”வைணவ வெறியன் கமலஹாசன் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
“சபாஷ் நாயுடு” கமல் அடுத்த படம். எங்கப்பா போனாங்க அந்த இரத்த பரிசோதனை மையம் நடத்துற சீமான் குரூப் சட்டுபுட்டுன்னு கமல் தமிழற இல்லையான்னு சொல்லிடுங்க
சபாஷ் நாயுடு… கமல் ஹாஸனுக்கு இளையராஜா கொடுத்த தலைப்பு இது!# கமலும், இளையராஜாவும் இனி திராவிட வந்தேறியாக சீமானுக்கு தெரியலாம், வேலை வெட்டி இல்லாமல் சினிமா வசனம் பேசி திரியும் அவரின் வாயில் அவல் போட்டு விட்டார்கள் !?
*தமிழ் மொழிப் பித்தன் feeling enraged
மூன்று மொழிகளில் படமாக்கப்படும் ஒரு திரைப்படத்துக்கு அந்த மூன்று மொழிகளிலும் தானே தனித்தனியாகப் பெயர் வைக்க வேண்டும் ??? ஆனால் தமிழ் நாட்டில் தமிழில் வெளியாகப் போகும் படத்துக்கு எதுக்குடா ” சபாஷ் நாயுடு ” என்று பெயர் வைக்குறீங்க??? தமிழில் நல்ல பெயரே கிடையாதா ?? இதைப் பார்க்கும் வெளியுலகம் என்ன நினைக்கும்?? தமிழுக்கும் தெலுங்குக்கும் வேறுபாடே கிடையாது, தமிழ் மொழி என்பது தெலுங்கு மொழியின் ஒரு கிளை தான் போலும் என்ற எண்ணம் தானே வரும்?? ஏற்கனவே தேவர் மகன்,விருமாண்டி போன்ற படங்களை வெளியிட்டு தமிழ் குலங்களுக்குள் தீராப் பகையை வளர்த்து விட்ட கயவன் தான் இந்தக் கமலகாசன்.இப்போது இது போன்ற தெலுங்குப் பெயரைத் தனது தமிழ் படத்துக்குச் சூட்டியுள்ளான். தமிழ் நாட்டில் கேட்பதற்கு எவனும் இல்லை என்ற நினைப்பாடா ???
.