ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் காலங்களில் உருவான கோவில்களில் இச் சிற்பங்களை காண இயலாது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஜயநகர மன்னர்கள் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியைக் கைபற்றிய பின், அங்கிருந்த எரோட்டிக் கலையினை ஆந்திரம் வழியாக சுமார் 16-ம் நூற்றாண்டுக்கு பின்னரே கொண்டு வந்தனர். இந்த Erotic கலையினை வந்தேறி அரசுகள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நம் கோயில் மரபில் திணித்தனர். இவை பெரும் பாலும் வைதீக கோயில்களின் கதவுகள், தேர்களில் அதிகமாகவும் பிற இடங்களில் குறைவாகவும் காணப்படும். அதே போல் நீர் நிலைகளுக்கு அருகாமையிலும் கிடைக்கின்றன. இந்த Erotic கலை மரபு பூர்விக குல தெய்வ கோயில்களில் காண்பது அரிது.
காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர்.
இந்திய கோயில்களில் Erotic சிற்பங்கள் குறித்த எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைக்கு காந்திராஜன் வினை இந்த விளக்கம்.