ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகிலுள்ள CM நகரில் செவ்வாய்கிழமை மதியம் மாரியம்மாள் என்ற அருந்ததிய சமூகத்தை சார்ந்தவர் மரணமடைந்தார்.. அவரது உடலை மேற்படி சமூக மக்கள் 25 ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் புதைக்க விடமாட்டோம் என்று நாயக்கர் , முக்குலத்தோர் , பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர்.
இதனிடையே அருந்ததியின மாரியம்மாளின் உடலை வேறு இடத்தில் புதைக்கவும், அருந்ததியின மக்களுக்கு தனி சுடுகாடு கட்டித்தருவதாகவும் ஈரோடு அதிமுக துணை மேயர் பழனிச்சாமி சமரசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால், பொது சுடுகட்டில்தான் புதைப்போம் என்றும் உடலை புதைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று ஈரோடு-பவானி முக்கிய சாலையில் தற்போது பொதுமக்களும் திராவிடர் விடுதலை கழக அமைப்புச் செயலாளர் தோழர் ரத்தினசாமி , வெளியீட்டு செயலாளர் ராம இளங்கோவன் மற்றும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் நள்ளிரவு 12:30 மணிக்கு, மாரியம்மாளின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
முக்குலத்தோரும் வன்னியரும் பள்ளரும் தெலுங்கு நாயக்கர்களோடு சேர்ந்து , இந்த எதிர்ப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இறந்து போன மாரியம்மாள் வன்னியர் சமூகம் அவர் காதலித்து அருந்ததிய தோழரை மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sources: Input from @மணிகண்டன் மா.பா, //// மு.ரா. பேரறிவாளன் /// வைரம் தி.வி.க