புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் கார்த்திகைச் செல்வன் ஓய்வுபெற்ற அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டபோது, கோபமான அவர், “யாருக்காக அரசாங்கம்? ஐ ஏ எஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” என்று பேசினார். இணைப்பு கீழே…