தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பீட்டர் அல்போன்ஸ், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் போன்றவர்களோ, சந்திரகுமார் போன்றவர்களோ கட்சியின் செல்வாக்கை ஒருபோதும் தூக்கி நிறுத்தப் போவதில்லை. அந்தக் கட்சியின் ஒற்றைத் தலைமையும் இதோ இந்த 90 வயது வேர்மட்ட தொண்டர்களுமே கட்சியின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள்.
பழநியைச் சேர்ந்த பெரியவர் பழனிக்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை. அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜமாணிக்கம் போட்டியிடுகிறார். ஆனால் தன் கட்சி கூட்டணி வைத்துள்ள வேட்பாளர் ராஜமாணிக்கத்தின் வெற்றிக்காக பழநி நகரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
“ஏறக்குறைய கலைஞர் கருணாநிதியின் வயதையொத்த இந்த முதியவர் ஓய்வறியா உழைப்பாளி. இவரது உழைப்பில் உண்மை உள்ளது” என இவரைப் பற்றி சிலாகிக்கிறார் ராஜமாணிக்கம்.