ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!

பெ.சண்முகம்

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என்று கூட்டம் தவறாமல் கூறிவருகிறார் மு.க.ஸ்டாலின். வாக்குறுதிதானே பின்னால், யார் கேட்கப் போகிறார்கள், அப்படியே கேட்டாலும் வார்த்தையால் விளையாடத்தான் கலைஞர் இருக்கிறாரே என்ற தைரியத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை தேர்தல்தோறும் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது  திமுக,விற்கு! உதாரணத்திற்கு சில மட்டும் இங்கே!

1967 தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அண்ணா சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு படி நிச்சயம், மூன்று படி லட்சியம் என்று கூறி அதுவும் ஒரு சில நகரங்களில் மட்டும் வழங்கி விட்டு வார்த்தையால் விளையாடிய வரலாறு திமுகவின் வரலாறு!

1996 தேர்தலில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். பிறகு டன் ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே உயர்த்தினார். 1000 என்றீர்களே என்று கேட்டபோது, ஆமாம் சொன்னேன் உடனே தருவதாகவா சொன்னேன்? ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக தருவோம் என்று விளக்கமளித்தார் கருணாநிதி. ஆட்சி காலம் முடியும் வரை 1000 ரூபாய் தரவே இல்லை.

2006ல் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 50 லட்சம் ஏக்கர் இருப்பதாகவும் அதை நிலமற்ற 25 லட்சம் விவசாய தொழிலாளி குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் நிலம் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. எங்களை போன்றவர்களெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு அதை பிரச்சாரம் செய்தோம். ஆட்சி அமைந்தவுடன் அமைச்சர் தலைமையில் மேற்கு வங்கத்திற்கு குழுக்களையெல்லாம் அனுப்பினார். பிறகு, சட்டமன்றத்தில் கேட்ட போது, “கையளவு நிலமாக இருந்தாலும் கட்டாயம் தருவேன்” என்றார். இரண்டு ஏக்கர் கையளவானது.

பிறகு இது தொடர்பாக அரசாணை வெளியிட்டபோது

  1. ஆக்கிரமிப்பில் இல்லாத தரிசு நிலம்,

  2. சிறு குறுவிவசாயிகளிடம் உள்ள அரசு தரிசு புறம் போக்கு நிலம்,

  3. சிறு – குறு விவசாயிகளுக்கு சொந்தமான தரிசு பட்டா நிலத்தை அரசு செலவில் மேம்படுத்தி வழங்குவது

இவ்வாறு மூன்று வகையான நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் எங்கேயாவது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் என்பது தப்பி தவறியாவது இருக்கிறதா என்று பாருங்கள். விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தை மேம்படுத்தி தருவதையே “இலவச நிலம் வழங்கும் திட்டம்” என்று சொன்ன புளுகுணி திமுக என்பதை மறந்து விடக்கூடாது 50 லட்சம் ஏக்கர் எங்கே என்று கேட்டபோது அவ்வளவு நிலம் இல்லை என்று கூறினார். நிலம் எங்காவது காணாமல் போகுமா? கிணற்றை காணோம் என்று வடிவேலு கூறியதை போல நிலத்தையே காணோம் என்று சொன்னது திமுக.

தற்போதைய தேர்தல் அறிக்கையில், பாலுக்கு லிட்டருக்கு ஏழு ரூபாய் நுகர்வோருக்கு குறைக்கப்போவதாக ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. 2 கோடி குடும்பங்கள் ஒரு நாளைக்கு 1 லிட்டர் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு நாளைக்கு 14 கோடி ரூபாய். மாதம் 420 கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கு 5040 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டி வரும். நிறைவேற்றுவார்களா? முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள். ஆவின் பாலுக்கு மட்டும் என்று வைத்துக்கொண்டால் கூட, 30 லட்சம் லிட்டர்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. 30 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் 7 ரூபாய் குறைவு என்ற சலுகை கிடைக்கும். தனியார் கம்பெனி பாக்கெட் பால் வாங்கக்கூடியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. ஆவின் மட்டும் என்று எடுத்துக் கொண்டால் கூட 307= 210 லட்சம். ஒரு நாளைக்கு! ஒரு மாதத்திற்கு 21030= 6300 லட்சம். வருடத்திற்கு 63*12= 756 கோடி ரூபாய். நிச்சயமாக இதை செய்ய மாட்டார்கள்.

ஐந்து வருடங்களுக்குள் செய்வோம் என்றோ அல்லது சென்னை மாநகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்றோ மாற்றி பேச அதிகம் வாய்ப்பிருக்கிறது. கடைசியாக இந்த வாக்குறுதிக்கு பால் ஊற்றுவதுதான் நடக்கும். ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். அவர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தினால் கூட ஒரு நாளைக்கு 60 லட்சம் ரூபாய் அரசு மானியத்தை கூட்ட வேண்டும். செய்வார்களா? இல்லை கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டை நாமம் சாத்தப் போகிறார்களா? மக்கள் இந்த முறை ஏமாறமாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை `ஹீரோ அல்ல ஜீரோ’ என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

நன்றி: தீக்கதிர் 

One thought on “ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!

  1. ஆவின் நிறுவனத்தினால் கொள்முதல் செய்யப் படும் பால் ஒரு மூலப் பொருள் மட்டுமே .. அதில் இருந்து கேசின், வெண்ணை, நெய், தயிர், மோர், கடைசியாக பால் இத்தனை விற்கிறரர்கள.. கணக்கை ஒழுங்காக எழுதினால் லாபம் சாத்தியமே..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.