தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர். கே. நகர் தொகுதியிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும் திங்கள்கிழமை வேட்புமனுதாக்கல் செய்தனர். வேட்புமனுத்தாக்கலின்போது வேட்பாளர்களின் சொத்துமதிப்பு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி,
ஜெயலலிதாவின் சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ. 118.58 கோடி. இதில் அசையும் சொத்துகள் ரூ. 41. 63 கோடி; அசையா சொத்துக்கள் ரூ. 76. 95 கோடி. கூடவே, ஜெயலலிதாவிற்கு ரூ. 2.04 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனு கூறுகிறது.
இதேபோல் கருணாநிதியின் சொத்து மதிப்பு, (மனைவியாருடையது) ரூ. 62.99 கோடி. கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாளுக்கு 11.94 கோடி வங்கி கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.