கவிஞர் மஜீதுக்கு இலங்கை அரசு வழங்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரதி விருது!

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் மஜீதுக்கு அந்நாட்டு அரசு வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனையாளருக்கான ‘ரதி விருது’ வழங்கப்பட்டது. மஜீத் சுகயீனமாக இருப்பதால் அவருடைய மனைவி சாபிறா A.மஜீத் விருதைப் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து, தன் கணவரின் உடல்நலன் குறித்தும் சாபிறா எழுதியுள்ள முகநூல் பதிவு:

மஜீதுக்கு கட்டம் கட்டமாகவே வைத்தியம் நடைபெறுகிறது, அது சென்னையில் உள்ள விஐயா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முதலாம் கட்டம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மூன்று மாதங்களுக்கு மாத்திரைகளை கொடுத்து அடுத்த மூன்றாவது மாதம் வரும்படி அழைத்தனர். மூன்று மாதங்களின் பின் சென்றிருந்தோம். Dr.Theepak Arujunthaj (நரம்பியல் நிபுணரும் பேராசிரியர்) கூறினார் அவரது உடல்நிலை மிக பலயீனமாக இருப்பதால் முதல் கட்டமாக கண்களை திறப்பதற்கான ஊசி போடப்பட்டது. இதன் செலவீனம் இலங்கை நாணயப்படி 2 இலச்சமும் தியட்டர் பணம் 35 ஆயிரம் ரூபாயும் முடிந்தது.
பின் அடுத்த கட்டத்துக்கு இவரது உடல் நிலை இடங்கொடுக்காததால் அதி விலை கூடிய மாத்திரைகளை வழங்கி இதிலிருந்து 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வைத்தியசாலை வந்து உடல்நிலை தேறி இருந்தால்,


மூளையில் நரம்பு ஒன்று துவாரத்தை ஏற்படுத்தி இருப்து உங்களுக்கு தெரிந்ததே.
அடுத்த மூன்று மாதங்களுக்கு அதி விலை கூடிய மருந்துகளையும் வழங்கி அத்தோடு நாடி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதிவிலை கூடிய மாத்திரை ஒன்றைத் தந்து அடுத்த 7ம் (july) மாதம் முதலாம் வாரத்தில் வரும்படி அழைத்துள்ளார்.

குறிப்பு:- 1
எனக்காக இறைவனைப் பிரார்த்தித்த, பண உதவி செய்த அமைச்சர் ரிசாட் பதுர்தீன் அவர்களுக்கு எனனுடையதும் எனது கனவர் சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் (அக்கரைப்பற்று, பொத்துவில்) எங்களுடைய பிரார்த்தனையும் உங்கள் மீதான அன்பும் உங்களது மனிதாபிமானத்தை மறக்க முடியாது.

குறிப்பு:-2
எனது இருதயத்தில் ஏற்ப்பட்ட நோய்க்காக இருதய இயங்கு கருவி (pacemaker) பொருத்த உதவிய எல்லா குடும்பத்தினர்க்கும் எனது அன்பு தோழர்களுக்கும் புலம்பெயர்ந்த தோழர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் தோழர்களுக்கும் ஈழத்தில் வசிக்கும் தோழர்களுக்கும் அதில் கவியுகனுக்கும், அவருடைய 90% உதவிகளுக்கும் ரியாஸின் 10% உழைப்புக்கும் குடும்பம் சார்பாக பிரார்த்தித்துக் கொள்கிறோம்

குறிப்பு:- 3
கவிஞர் பாடலாசிரியர் அஸ்மின் அவர்களுக்கு, இம்முறை இந்தியாவிற்க்கு செல்வதற்க்கு தனிப்பட்ட முறையில் நின்று 90% உதவியை பெற்றுத்தந்தார், அத்தோடு மிகுதியை அவரது அரபு தேசத்தில் வாழும் தோழர்களாளும் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

கவிஞர் மஜீத்தை பின் தொடர: Majeeth Shamee

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.