“போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்” என்ற அவரது அரபுக் கவிதையின் ஹீப்ரு மொழிபெயர்ப்பே இத்தண்டனைக்கான காரணி.
தங்களைக் காத்துக் கொள்ளப் போராடுங்கள் என்ற கருத்திலமைந்த அந்தக் கவிதையை இஸ்ரேலிய அரசுக்கெதிரான தூண்டுதல் என்று கருதி அவர் கடந்த ஒக்டோபர் இறுதியில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 3 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது டெல்அவிவ் புறநகர்ப் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“எமது மக்களைக் கொல்லும் இஸ்ரேலியக் கொலைஞர் சுதந்திரமாக நடமாட, எமது மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காகத் தண்டனை விதிக்கப்படுவது விசித்திரமானது.
என்னுடையதும் என்னைப் போன்ற ஏனையவர்களதும் விடயத்தில் இஸ்ரேலிய ஜனநாயகத்தின் வேடிக்கை முகத்தைக் கண்டு கொள்ளலாம். இதுதான் ஜனநாயம் எனில் அதுவே யூதர்களின் ஜனநாயகமாகும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி – எலக்ட்ரோனிக் இன்திபாழா