சென்னை சேலையூர் அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் வட மாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 21-ம் தேதி நடைபெற்ற பிராக்டிகல் தேர்வின் போது, அட்டானு டெபமாத்(21) என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவரை பேராசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே தங்கியிருந்த மாணவர் அடானு, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவில் இன்ஜினியரிங்கள் மாணவரான அடானுவின் மரணத்துக்கு பேராசிரியர், மாணவரை அவமானப்படுத்தியதே காரணம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் போராட்ட மாணவர்களை அமைதிப் படுத்தி, மாணவரின் உடலை கூராய்வு செய்ய அனுப்பிவைத்தனர். தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர், கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.