ஓலக்குடி காலனி தெருவில் வசித்துவரும் நாகப்பன் மகன் குரு மூர்த்தி என்பவரும், அதேஊரைச் சேர்ந்த மெயின் ரோட்டில் வசிக்கும் சுப்பிர மணியன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். குரு கட்டட வேலை பார்த்து வந்தார். DYFIல் அங்கம் வகித்தவர். தங்கள் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் குருவும் சரண்டாவும் தங்கள் வீட்டை விட்டு 16.4.16 வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதியிருக்கின்றனர். சரண்யாவின் தந்தை சுப்பரமணியம் தங்கள் பெண்ணைக் காணவில்லை என புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் 20.4.16 அன்று ஓலக்குடி வாசிகள் சிலர், ஊருக்கு வெளியே இருந்த புதரின் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். மரத்தில் அழுகத் தொடங்கிய நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் போலீஸாருக்கு தகவல் அனுப்பினர். போலீஸார் இருவரின் உடலும் காணாமல் போன குரு, சரண்யாவுடையது என உறுதி செய்தனர். உடல்கள் பொரையூர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மரணம் சாதிவெறியர்களின் கொலையாக இருப்பதற்கு இரண்டு வலுவான காரணங்களைச் சொல்கின்றன, தலித்-இடதுசாரி இயக்கங்கள்.
- தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த உடல்கள் தரையைத் தொட்டுக் கொண்டு உள்ளன.
-
குருவின் உடல் கருத்து, விறைத்துப் போய் உள்ளது. குருவின் மேல் அமிலம் ஊற்றப்பட்டிருக்கலாம் என்பது கொலைக்கான வலுவான காரணமாக இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியாரிய இயக்கங்கள் இந்த மரணங்கள் குறித்து முழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளன.
ஆங்கில மூலம்: Joshua Isaac Azad
Report & photo: Vijayendran, VCK camp secretary and Simon (a) Asai Thambi, Arumpakkam village, Poombuhar.
Inter caste couple found dead :
Nagapattinam dist. Tharangambadi Taluk – Dalit youth Guru Moorthi and Vanniyar girl Saranya from Olakkudi village were in love. Guru Moorthi was a construction worker and part of DYFI in his village. On 16.4.16 the couple eloped. Saranya’s father Subramanian lodged a police complaint regarding his missing daughter. On 20.4.16 people from Athupakkam village around 2kms from Olakkudi searched nearby fields covered in bushes after sensing foul smell. They found two decayed bodies of a man and woman hanging from a peepul tree. Upon investigation by the police the bodies were identified as Guru Moorthi and Saranya who were missing for past four days. The Dalits of Olakkudi village thought the couple got married and staying at a relative’s house but never expected to find them dead. Their bodies were taken to Poraiyar and Mayiladuthurai government hospitals respectively.
This is how their bodies were found ‘hanging’ from the tree. When we zoom in we can see Saranya’s hand bag under the tree, also some dark fluid is seen over Guru Moorthi which the Dalits and parties allege is acid.
VCK, Communist parties and other movements from the area demanded a thorough investigation. Dalits from the village allege that the couple was murdered. The couple’s foot was found touching the ground in hanging position, their bodies bore injury marks and some sort of acid was found over Guru Moorthi. VCK activists met with the Dalit family to discuss further protests. The parents are agricultural laborers. Guru Moorthi’s mother said ‘I have another son, elder brother of Guru Moorthi. I want him to live’.