கோவையில் இஸ்லாமிய மக்களின் மீது வன்மத்தை வைத்து வளர்க்கப்பட்ட காவி பயங்கரவாதம் கம்யூனிஸ்ட் இயக்க இளைஞர் ஒருவரை பலிவாங்கியிருக்கிறது.
“கோவை மாநகரம் ஆவரம்பாளையம் தெற்கு வீதி எண் நான்கில் வசித்து வருபவர் எஸ்.சதீஸ்குமார் (வயது 20). இவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில்(AIYF), தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12.04.2016 அன்று, மாலை தெற்கு வீதி பாரதி படிப்பகத்தில் இருந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த காவி கும்பலை சேர்ந்த அருண் என்பவர் அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த AIYF இளைஞர்களை சண்டைக்கு அழைத்துள்ளார். சண்டை தொடங்கவே, இதை அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இரவு 11 மணி சுமாருக்கு அருண் அவரது நண்பர்களுடன் வந்து சதீஷ்குமார் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டு இருந்த அவரை கத்தியால் சரமாரியாக குத்தயுள்ளார். இதில் சதீஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்தபகுதியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைசெயலாளர் ஏ.சி.செல்வராஜ் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மாருதி காரையும் தாக்கி கண்ணாடிகளை அவர்கள் உடைத்து உள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சதீஸ்குமார் சமீபத்தில் வேறு அமைப்பில் இருந்து விலகி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதில் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாகவே இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, காவி பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாகவே, மாற்றுக்கருத்து உள்ளவர்களை தாக்குவது, அலுவலகங்களை எரிப்பது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட காவி கும்பலின் கொலைவெறித் தாக்குதலை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வன்மையாக கண்டிக்கின்றது”
– அனைத்திந்திய_மாணவர்_பெருமன்றம் (#AISF), தமிழ்நாடு மாநிலக்குழு.
இந்நிலையில் ஒன்பது இடங்களில் குத்துப்பட்ட சதிஸ் 22-ஆம் தேதி மருத்துவமனையில் இறந்தார். கொலை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
தளி ராமச்சந்திரன் மேல எப்ப பிராது கொடுக்கப் போறேள்?
LikeLike