சாதாரணமாக பேசும்போது யாரை அதிகம் விரும்புகிறோமோ அல்லது வெறுக்கிறோமோ அவர்கள் நம்மை அறியாமல் வெளிப்பட்டு விடுவார்கள். சனிக்கிழமை பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதி, பிரச்சார உரையின் ஒரு கட்டத்தில் தோழமைக்கட்சிகள் பற்றி பேசியபோது காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் என்று பேசினார். சில நொடிகள், காங்கிரஸ் என்று சொன்ன வாக்கியத்தைத் திருத்தினார்.
கம்யூனிஸ்டுகளை திமுக தலைவர் வெறுக்கிறாரா, விரும்புகிறாரா அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். ஆனால் நடக்கிற சட்டமன்றத் தேர்தல் திருவிழாவில் இது ஒரு ரசிப்புக்குரிய பேச்சு.