ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். பட்டம் படித்த திலீபன், முழுவேலையாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் தவித்த உதகை பெண் ஒருவரை மீட்டு கொண்டுவருவதற்கு அவருடைய குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். செல்ஃபியும் ஸ்டேடஸ் போராளியுமாக இல்லாமல் சமூக ஊடகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் இளைஞர் இவர். சமீபத்தில்  காவல்துறையினரால் கால்கள் நசுக்கப்பட்ட ஈழத்தமிழருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் திலீபன் செய்த உதவி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

திலீபன் மகேந்திரன்

தோழர்களே தயவு செய்து உதவுங்கள்…

இந்த நாடும், அரசும் நம் மக்களை வாழவைக்காது, முடிந்த வரை நாம் இனைந்து உதவுவோம்..

சென்ற 15.03.2016 அன்று ஈழத் தமிழர் சுபேந்திரன் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்கள் ஆகியும் அவரால் கால்களை இயக்க முடியவில்லை. அந்தக் குடும்பம் அன்றாடச் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கிறது.

கால் மணிக்கட்டு எலும்பை உடைத்து அதில் பூட்ஸ் காலால் ஏறி மிதித்ததால் தசை எலும்புக்கிடையே சென்று இப்போது தரையில் கால் வைக்க கூட முடியாத வலி வேதனையில் தவிக்கிறார்.

கூலிதொழிலாளியான இவர் குடும்பத்துக்கு கடந்த 2 மாதங்களாக வருமானம் இல்லை. தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் 20 ஆயிரம் கொடுத்தார். கும்மிடிப்பூண்டியிலிருந்து வழக்கு, மருத்துவ செலவுக்காக சென்னை வருவதற்க்கே அது போத வில்லை.. இப்போது உதவ ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள்..

காலையில் இருந்து நான் இவருடன் இருக்கிறேன். சென்ட்ரல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காது கால் நடக்க முடியாது என்று கூறிவிட்டனர். இப்போது அமைஞ்சிகரை அண்ணா சித்த மருத்தவமனையில் தங்கி இருக்கிறார். அவருக்கு அவருது துனைவியும், நானும் உதவியாய் இருக்கிறோம்.

45 நாட்கள் இங்கே சிகிச்சை பெற வேண்டுமாம்.

ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.

அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியோ அல்லது அரிசி, உணவு பொருட்களாகவோ உதவுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்…

நேரடியாகவே மருத்துவமனை வந்தும் உதவுங்கள். அப்போதுதான் நிலமை என்ன என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

நான் அவருடன்தான் உதவியாய் இருக்கிறேன் என்னை தொடர்புகொள்ளுங்கள் :
+91 90 03 406819

உங்கள் நண்பர்களுடன் இனைந்து இயன்ற நிதி உதவியை செய்யுங்கள்.. ஈழத்தில் இறந்த பிணத்தை போட்டு விருப்பம் பெற நினைப்பதை தவிருங்கள்..

உயிருடன் உள்ளவரை காப்பாற்றுங்கள்….

ஏங்கிட்ட அக்கோண்ட் இல்ல. இது நண்பருடைய அக்கோண்ட். தயவு செஞ்சி இதுக்கு நிதி உதவி அனுப்புங்க.

Sudha gandhi hdfc bank 08471140018590 ifsc hdfc0000847. Thiruvanmiyur Brance.

நன்றி.

திலீபன் மகேந்திரன்

“குடும்பத்தோட தற்கொலை செஞ்சிக்கிறத தவிர எங்களுக்கு வேர வழியில்ல”

இதான் அந்த அக்கா ஏங்கிட்ட மொதல்ல சொன்னது.

நாங்க இருக்கோம் அக்கா நாங்க உதவுறோம்னு சொன்னேன்.

அகதிகள் முகாம்ல ஈழத்தமிழர் சுபேந்திரன் அண்ணனோட கால உடைச்சதால அவர் எப்பையும் போல கூலி வேலைக்கு போக முடியல. குடும்பத்துக்கு வருமானம் இல்ல.. ரெண்டு குழந்தைகளும் இருக்கு..

“அகதிகள் முகாம்ல நெரையா மளிக கட இருக்கு, நீங்க நைட்டி, சுடிதார், நாப்கீன் மட்டும் வாங்கி கொடுத்தீங்கன்னா முகாம்ல வித்து நாங்க எங்க குடும்பத்த காப்பாத்திப்போம் தம்பினு” அந்த அக்கா சொன்னாங்க.

நா நம்பிக்கையான வார்த்தைய சொன்னதால கொஞ்சம் இப்ப தெம்பா இருக்காங்க..

அமைஞ்சகரை சித்தா ஹாஸ்பிட்டல்லதான் இப்ப சிகிச்சை எடுத்துட்டு இருக்காங்க. ஒரு நாள் சாப்பாட்டு செலவே இவுங்களால சமாளிக்க முடியல. 45 நாள் தங்கி சிகிச்சை எடுத்துக்கனும்னு சொல்லி இருக்காங்க.. இவருக்கு கால் சுத்தமா முடியல..

தோழர்களே தயவு செஞ்சி உதவுங்க.. நண்பர்களுடன் இனைந்து நிதி உதவி பன்னுங்க.

ஊமை அழகிரி தாத்தா உங்க கிட்ட நைட்டி, சுடிதார், பிட்டு துணி இருந்தா இந்த ஈழதமிழர்களுக்கு கொடுத்து உதவுங்க…

அத வித்து குடும்பம் நடத்துவாங்க.

திலீபன் மகேந்திரன்'s photo.

கால் உடைந்த முகாம் ஈழத்தமிழர் சுபேந்திரனுக்கு மூவாயிரம் பண உதவி வழங்கிய Subash Chandra Bose & Ila Maran தோழர்களுக்கு ரொம்ப நன்றி..

தோழர்களே ஈழத்துல செத்தாதான் உசுரு இல்ல.. இங்க இருக்க ஈழத்தமிழர்களும் மனுசன்தான். உதவுங்கய்யா.

திலீபன் மகேந்திரன்

நேரில் வந்து நலம் விசாரித்த தோழர் @joe britto -க்கு ரொம்ப நன்றி… !!!

திலீபன் மகேந்திரன்'s photo.
திலீபன் மகேந்திரன்'s photo.

இது அன்பு, பாசமா? இல்ல ஆணாதிக்கமான்னு தெர்ல…..!

நானும் மூனு நாளா பாக்குறேன் இந்த அக்கா அடிப்பட்ட தன் கணவர அப்டி அன்பா, பாசமா பாத்துக்குறாங்க.. டாய்லெட் போக கூட கால் எடுத்து கீழ வைக்க முடியல.. (ரெண்டு மாசமா இதே நிலமதான்)

தனியா உக்காந்து அழுவுறாங்க..

காலையில 8 மணியில இருந்து நைட்டு 10 மணி வர கூடவே இருந்து கவனிச்சிக்கிறாங்க.. (நைட்டு மட்டும் நா பாத்துப்பேன்.)

இப்ப நா சொல்ல வரது என்னனா? இதுவே ஒரு பொன்னு அடிப்பட்டு கணவன் இருந்தா போடி மயிராயின்னு சொல்லிட்டு இன்னொரு பொன்ன தேடிப்போயிருப்பான்…

என் அப்பன் கூட என் அம்மா ஆக்ஸிடெண்ட்ல செத்த கொஞ்ச நாள்லையே இன்னொரு கல்யாணம் பன்னிக்கிட்டான். (But still i love my dad).

ஆணாதிக்க சம்மூவம் பாஸ் இது..

திலீபன் மகேந்திரன்'s photo.

நாம் தமிழர் கட்சி தோழர்களுக்கு நன்றி..

ஈழத்தமிழர் சுபேந்திரனுக்கு 5000 ரூபா நிதி உதவி கொடுத்து உதவிய மாரிமுத்து தோழருக்கு ரொம்ப நன்றி..

நேரில் வந்து நலம் விசாரித்து நிதி உதவியை கொடுத்த தோழர் இளந்தமிழன் ச. கா. ரா-க்கும் நன்றி…

இப்படிக்கு வந்தேறி மகி

திலீபன் மகேந்திரன்'s photo.

தோழர்களே இனிமே யாரும் சுபேந்திரன் ஈழத்தமிழருக்கு நிதிஉதவி அனுப்ப வேண்டாம்.. (திங்கள் அனுப்புவேன் என்று சொல்லியவர்கள் தவிர)…

அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற தேவையான சுயதொழில் ஆரம்பிக்க நிதி உதவி வர தொடங்கிவிட்டது.. அவர்கள் முகாமுக்கே சென்று தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுத்துவிடுகிறேன்..

நிதி உதவி செய்த அனைத்து தோழர்கள் பெயரையும் நாளை பதிவிடுகிறேன்..

ரொம்ப நன்றி..

ஒரு இளைஞன் ஒரு ஈழத்தமிழர் குடும்பத்துக்கு உதவு முடிகிறது. ஆனால், 30 ஆண்டுகளாக அகதிகளாக முகாம்களில் வதைப்படும் ஈழத்தமிழரை மீட்கும் எந்த நடவடிக்கையையும் ஈழ வியாபாரிகளால் செய்ய முடியவில்லை. 

4 thoughts on “ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

  1. இவன்தான் நமது அடுத்த தலைமுறையின் சுவாச காற்று – நம்பிக்கை !
   > திலீபன் மகேந்திரன் ” நீடூழி வாழ்க – வாழட்டும் !

   Like

 1. இவன்தான் நமது அடுத்த தலைமுறையின் சுவாச காற்று – நம்பிக்கை !
  > திலீபன் மகேந்திரன் ” நீடூழி வாழ்க – வாழட்டும் !

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.