நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சிஃபி டாட் காம் இணையதளத்துக்கு அளித்துள்ள குறிப்பில்,
“நடிகர் சங்கத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகுகிறேன். பிரச்சினைகளின் போது ஒரு அமைப்பாக செய்யவேண்டிய கடமையிலிருந்து சங்கம் தவறிவிட்டது. நான் பல பிரச்சினைகளை சந்தித்தபோது அவர்கள் எனக்கு உதவவில்லை. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் என்னை வருத்துக்கு உள்ளாக்கியது. இதில் விளையாடிய பல நடிகர் ஜோக்கர்களாகத்தான் எனக்குத்தெரிந்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போட்டியைக் காண ரஜினி, கமல் ஆகியோர் வந்திருந்தனர்.
“I have decided to move out of Nadigar Sangam due to various reasons. As an association who are supposed to help actors during crisis or problems, they have failed. I have not got any kind of support when I faced issues. And the recent cricket match which they conducted made me so upset. Most of our actors were made to look like jokers. ”